தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஜம்மு & காஷ்மீரில் ‘இசட்-மோர் சுரங்கப்பாதை- பிரதமர் திறந்து வைத்தார்!

06:27 PM Jan 13, 2025 IST | admin
Advertisement

ம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான ‘இசட்-மோர்’ (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான பயணத்தை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, டாக்டர். ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பிற அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement

சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018 ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்த திட்டம் முடிவடைய தாமதம் ஏற்பட்டது. பின்னர், இந்தத் திட்டம், அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சி.பி.ஜோஷியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

Advertisement

ஆரம்பத்தில் 2016-2017 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை இப்போது நிறைவடைந்துள்ளது. ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது. 8,650 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை, நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் வேகமான பயணத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்தில் நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பொறுத்தவரை சோனாமார்க் சுரங்கப்பாதை மிகவும் முக்கியமானது.

ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அதிகம் ஏற்படுவதை சமாளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும்,கடந்த 2024 அக்டோபர் 20 அன்று, இதே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் APCO Infratech நிறுவனத்தின் தொழிலாளர்கள் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஒரு உள்ளூர் மருத்துவர் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த ஆண்டு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
#jammukashmirPM ModiSonamargTunnelzmorhtunnelசுரங்கப் பாதைஜம்மு -காஷ்மீர்
Advertisement
Next Article