For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய ராணுவ தினம்!

05:14 AM Jan 15, 2025 IST | admin
இந்திய ராணுவ தினம்
Advertisement

ட்சி பீடத்தில் இருப்போரின் செருக்கான பேச்சு, நடத்தை, லஞ்ச,ஊழல் மக்களின் பொறுப்பின்மை போன்றவை தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும், நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருகின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம், பாசம், குடும்பங்களை எல்லாம் மறந்து, நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் தான்.தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், நமது இந்திய ராணுவ வீரர்கள் நம் தேசம் மட்டுமின்றி. பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகியிருந்தாலும் கூட, அங்கும் சென்று தங்களது பணியை செம்மையாக செய்து பல உயிர்களை காப்பாற்றி நற்காரியங்களைச் செய்துள்ளனர். அங்ஙனம் தாயகம் காக்க தன்னலம் நீங்கி உறவுகளின் பிரிவுகளை ஏற்று வெயில், பனி பாராது ரத்தம் சிந்தி இன்னுயிரையும் தாய் மண்ணிற்காக இழக்கத் துணிந்து இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க இந்தச் சணமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவுகூறும் தினம் ஜனவரி-15. நம் நாடு சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார். அந்த வகையில் இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியால்,1776ம் ஆண்டு, கொல்கத்தாவில், ராணுவப் படை தொடங்கப்பட்டது. இது தான், தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப் புள்ளி .இதனைத் தொடர்ந்து, 1833ம் ஆண்டு, வங்காளம், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ராணுவப் படை விரிவுபடுத்தப்பட்டது. இவையனைத்தும் 1895ம் ஆண்டு, ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, British - இந்திய ராணுவமாக உதயமானது. இதன் மேல்மட்டத்தில் ஆங்கிலேயர்கள் இருந்தாலும், அடுத்தடுத்த இடங்களில், இந்தியர்களே பொறுப்பில் இருந்தனர். அப்போது, பிரிட்டிஷ்காரர்களுக்காக, உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, வெளிநாட்டுப் போர்களிலும் இந்திய ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். உலகப் போர்களில், பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தின் பங்கு முக்கியமானது. ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் என,பல்வேறு நாடுகளுக்கும் இந்திய ராணுவப் படையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். அக்காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட பல தலைவர்கள் போராடினர். ஒரு புறம் மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை முறையில் போராட்டம் நடந்தது. மற்றொரு புறம், ஆங்கிலேயர்களுக்கு அவர்களது வழியிலேயே பதிலடி தரும் விதமாக, 1941ல் 2ம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் உதவியோடு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இதில் தமிழர்கள் அதிகம் இடம்பெற்றனர்.சுதந்திரம் வழங்க முடிவு செய்து, இந்தியா--பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது ஆங்கிலேய ராணுவமும் 2 பகுதியாக பிரிக்கப்பட்டது. பெரும்பாலான வீரர்கள் இந்தியாவுக்கும், மீதி பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டனர்.

Advertisement

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947க்கு பின் பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் தலைமை பொறுப்பை ஆங்கிலேயர் தான் கவனித்தனர். இந்நிலையில்தான், 1948 ஜன., 15ல், ராணுவ தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் கரியப்பா ஏற்றார்.1955ல் ராணுவ தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. 1962ல் பாதுகாப்புக்கான தயாரிப்புத்துறை நிர்மாணிக்கப்பட்டது. 1980ல் டி.ஆர்.டி.ஓ., தொடங்கப்பட்டது. 2004ல் முன்னாள் வீரர்களுக்கான நலவாரியம் ஏற்படுத்தப் பட்டது.1947ல் கட்டமைக்கப்பட்ட இந்திய ராணுவம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீனப்படுத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணைகள், நவீன பீரங்கிகள், ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதம் சுமந்து செல்லும் கப்பல்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

நம் ராணுவம் சந்தித்த போர்கள்:

* 1947: காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துடன்,இந்திய ராணுவம் போரிட்டது.

* 1948: ஐதராபாத் மாகாணத்தைஇந்தியாவுடன் இணைப்பதற்காகஇந்திய ராணுவம் சண்டை.

* 1950: நடந்த கொரிய போரின் போது, தென்கொரியாவுக்குஆதரவாக போரிட்ட ஐ.நா., அமைதிப்படையில் இந்திய ராணுவம் சேர்ந்துபங்கேற்றது.

* 1961: ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுப் படைகள் வெளியேறிய பின்பும் போர்த்துகீசிய படைகள் வெளியேறாமல் இருந்தன. இதையடுத்து ராணுவம் அவர்களுடன் சண்டையிட்டு, கோவா மற்றும் டையூ டாமன் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்தது.

* 1962: இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. இந்திய ராணுவம் தோல்வியைத் தழுவியது. போரின் போது சில பகுதிகளையும் சீனாவிடம் இழந்தது. அப்போது முதல் சீன ராணுவம் அவ்வப்போது இந்திய பகுதிக்குள் ஊடுருவல் செய்து வருகிறது.

* 1965: பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி.

* 1971: பாகிஸ்தானுடன் மீண்டும் போர் ஏற்பட்டது. போரின் முடிவில் இந்தியாவின் முயற்சியால் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற புதிய நாடாக உருவானது.

* 1999: காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் போர் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து போரில் வெற்றி பெற்றது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement