For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தருணம் - விமர்சனம்!

08:19 PM Jan 14, 2025 IST | admin
தருணம்   விமர்சனம்
Advertisement

முன்னொரு காலம் பாடல், புராணம், குடும்பப் பாசம் போன்ற திரைக்கதைக்காக படங்கள் கொண்டாடப்பட்ட காலம் மாறி, அதிரடி ,அடிதடி சண்டை மற்றும் கொலைகளுக்காகவும், அதன் சவுண்ட் எஃபெக்ட்-களுக்காகவும் படங்கள் கொண்டாடப்படுவதுதான் இன்றைய நிலையாக உள்ளது. ஃபீல் குட் திரைப்படங்களை விட அதிரடி அல்லது திரில் படங்கள் அதிக வசூலைக் குவிக்கின்றன. குறிப்பாக வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதற்கு அடிப்படையாக இருப்பது சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள்தான் என்றால் அது மிகையல்ல.இச்சூழலில் நாயகி அறியாமல் செய்த கொலை மற்றும் அக்கொலையை மறைக்க முயலுதல் என்ற சிங்கிள் லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.

Advertisement

அதாவது சிஆர்பிஎப் போலீஸ் ஆபீசராக ஒர்க் செய்து வந்த நாயகன் கிஷன் தாஸ் ஒரு ஆபரேஷனில் தன்னுடைய சக டீம்மெட்டையே தெரியாமல் சுட்டு விடுகிறார், இதனால் பணியில் இருந்து சிறிது காலம் சஸ்பெண்டில் இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார். பிறகென்ன? இருவருக்கும் காதல் ஏற்படுகிறது, இந்த காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. இதனிடையே இளம் பெண்களை தங்கள் காம வலையில் வீழ்த்தும் வில்லன் ராஜ் ஐயப்பா, ஸ்மிருதி வெங்கட்டை வீழ்த்த ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் கிஷன் தாஸுக்கும் ஸ்மிருதிக்கும் திருமணமே நிச்சயமாகும் சூழலில் அவர்களைப் பிரிக்க திட்டம் போடும் ராஜ் ஐயப்பாவின் சதி வலையில் விழ மறுத்து வருகிறார் ஸ்மிருதி. ஆனாலும் இதைப் பயன்படுத்தி அவரைத் தன் வசப்படுத்த ராஜ் ஐயப்பா முயலும் போது எதிர்பாராத தருணத்தில் அவர் மாண்டு விடுகிறார். அப்போது ஸ்பாட்டில் ஆஜராகும் எக்ஸ் போலீஸ் கிஷந்தாஸ் இந்த கொலை பிரச்சனையில் இருந்து தனது வருங்கால மனைவியை காப்பாற்ற முயற்சிக்கிறார்.அதன்படி சிசிடிவி , வாட்ஸ்மேன்கள், ஆள் நடமாட்டம் என பிஸியாகவே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து உடலை அப்புறப்படுத்தி, கொலை வழக்கில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பிக்கும் தருணமே இப்படக் கதை.

Advertisement

முதன்மை பாத்திரத்தில் வரும் கிஷன் தாஸ் ஸ்மார்ட்டாக அந்த வேடத்தில் பொருந்தி இருக்கிறார். நடை, உடை, உடல் மொழி, சண்டை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியை வெளிப்படுத்தி இருக்கும் அவர் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்தால் ஃபீல்டில் கொஞ்ச்ச காலம் நீடிக்க வாய்ப்புண்டு. அழகு முகம் கொண்ட ஸ்மிருதி வெங்கட்டும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். வில்லன் லெவலில் வரும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், படம் முழுவதும் நிறைந்திருப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கதை என்றதும் ரவுடி துரத்தல், வில்லன் கூட்ட அடியாட்களுடன் மோதல் என்று வழக்கமான பாணியில் படம் செல்லும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று கதாநாயகி ஸ்மிருதி வீட்டில் ஒரு கொலை நடக்க அந்தக் கொலையிருந்து ஸ்மிருதியை காப்பாற்ற காதலன் கிஷன் எடுக்கும் முயற்சியின் வேகம் காட்சிக்கு காட்சி அதிகரித்து வீட்டிலிருந்து எப்படி இந்த பிணத்தை எடுத்துச் செல்ல போகிறார் என்ற கேள்விக்குறி கிளைமாக்ஸ் நெருக்கம் வரை நீடிக்கிறது.ஆனால்
ஒரு டெட் பாடியை ஒரு அப்பார்ட்மெண்டி; இருந்ர்க்ய் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துவது… அதற்கான சரியான லாஜிக்குகளை பிடிப்பது என்பதெல்லாம் சாமானியமான வேலை இல்லை. ஆனால் டைரக்டர் திட்டப்படியே எல்லாம் நடப்பதால் பிரச்சனை இல்லாமல் கதை இசைப் பின்னணியுடன் முடிகிறது. அதுவும் மகன் கொலை நடந்த பிளாட்டின், எதிர் பிளாட்டிலேயே இருக்கும் அவரது அம்மா கீதா கைலாசம் அவ்வப்போது இந்த வீட்டை நோட்டம் பார்த்துக் கொண்டே இருக்கும் போதும் செயல்படுத்துவது சினிமாவில் மட்டுமே முடியும்.

அத்துடன் கேமராமேன் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங்கும் பர்ஃபெக்ட். ஆனால் தர்புகா சிவாவின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பாஸ் மார்க் வாங்கி விடுகிறது . அவரது பின்னணி இசைதான் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. மொத்தமாக பார்ப்பதற்கு ஒரு நல்ல திரில்லர் படத்தின் பீல் கொடுத்தாலும் தருணம் இன்னும் நல்ல ஒரு படமாக அமைந்திருக்கலாம்.

மொத்தத்தில் தருணம் - நாட் குட்

மார்க் 2.25/5

Tags :
Advertisement