For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மத்திய கிடங்கு நிறுவனத்தில் பல்வேறு பணிவாய்ப்பு!

05:53 AM Dec 30, 2024 IST | admin
மத்திய கிடங்கு நிறுவனத்தில் பல்வேறு பணிவாய்ப்பு
Advertisement

ந்தியாவில் சேமிப்புக் கிடங்கானது மத்திய அரசால் 1937ல் தொடங்கப்பட்டு வேளாண்மைப் பொருட்களை சேமித்து வைக்கிறது இது நாட்டின் மிகப் பெரிய கிடங்கு ஆகும். மேலும் வேளாண் வாடிக்கையாளர்களுக்கு உதவி புரியும் வகையில் அமைந்துள்ளது. இந்த மத்திய சேமிப்பு கழகமானது 490 சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டது மற்றும் இதன் கொள்ளளவு 9.8 மில்லியன் டன்கள் ஆகும். இந்தச் சேமிப்பு கிடங்கானது அதிக அளவுடையப் பொருட்களை, வேளாண்மைப் பொருட்களின் தரத்திற்கு தகுந்தவாறு சேமித்து வைக்கப்படுகின்றது.இந்தக் கழகமானது, உணவுத் தானியக் கிடங்கு, தொழில்துறை சேமிப்புக் கிடங்கு, இறக்குமதி பொருட்களின் கிடங்கு, இறக்குமதிப் பொருட்களின் கிடங்கு, சரக்கு பெட்டி நிலையம், உள்நாட்டு அனுமதிச் சீட்டு மற்றும் விமானச் சரக்கு வளாகம் போன்ற பல்வேறு செயல்களைக் கொண்டது. சேமிப்பு மற்றும் கையாளுதல் மட்டும் அல்லாமல், இந்தக் கழகமானது சுத்தம் செய்தல் மற்றும் அனுப்புதல், கையாளுதல் மற்றும் எடுத்துச் செல்லுதல், பெறுதல் மற்றும் பகிர்மானம், கிருமிகளை அழிக்கும் பணிகள், நச்சு வாயு நேர்த்திப் பணிகள் மற்றும் பிற துணைச் செயல்கள் போன்ற பணிகளையும் உள்ளடக்கியது. மேலும் இந்த மத்திய சேமிப்பக் கழகமானது, பல்வேறு முகவர்களுக்கு ஆலோசனை பணியையும் / சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான பயிற்சியையும் தருகிறது. இந்த மத்திய கிடங்கு நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 165 பணியிடங்கள் மற்றும் சிறப்பு ஆட்சேர்ப்பு பிரிவில் 14 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்

Advertisement

மேனேஜ்மெண்ட் டிரைய்னி (பொது) 40

மேனேஜ்மெண்ட் டிரைய்னி (டெக்னிக்கல்) 13
கணக்காளர் 9
கண்காணிப்பாளர் 22
ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் 81
மொத்தம் 165

சிறப்பு ஆட்சேர்ப்பு

கண்காணிப்பாளர் 2
ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் 10
ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் 2

மொத்தம் 179

வயது வரம்பு

மத்திய கிடங்கு நிறுவனத்தில் 12.01.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். கணக்களார் மற்றும் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி

மத்திய கிடங்கு நிறுவனத்தில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பொதுப் பிரிவிற்கு மேலாண்மை, நிர்வாகம் சார்ந்த படிப்புகளில்பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவிற்கு விவசாயம், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணக்காளர் பதவிக்கு B.Com, வணிகத்தில் பட்டம் அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும்.
கண்காணிப்பாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு விவசாயத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.
கணக்காளர் பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
கண்காணிப்பாளர் பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வழங்கப்படும்.
ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு 29,000 முதல் ரூ.93,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி, கணக்காளர் மற்றும் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தபடும். தொடர்ந்து நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cwceportal.com/careers/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,350 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 12.01.2025

ஆன்லைன் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்

Tags :
Advertisement