வணங்கான் - விமர்சனம்!
கனவு தொழிற்சாலை என்றழைக்கப்படும் பயாஸ்கோப் மூலம் வித்தியாசமான உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் முன்னோடியாகத் திகழ்பவர் டைரக்டர் பாலா. சேதுவாக இருந்தாலும் சரி நந்தாவாக இருந்தாலும் சரி, இப்போது ரிலீசாகி இருக்கும் வணங்கான் உள்ளிட்ட தன் படைப்புகளை நோக்கி அனைவரின் கவனத்தையும் திருப்பும் தனித்துவமான திறன் கொண்டவர். நம்மில் பலரும் யோசிக்கும் பாணியில், யதார்த்தத்தில் அவருடைய ஒரு படம் கூட அமைந்ததில்லை. ஆனால் தான் எடுத்துக் கொண்ட வித்தியாச கதை களத்தை பார்வையாளர்களை ரசிக்க வைத்து விடுவதே பாலாவின் வெற்றி. அதிலும் தமிழகத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார் என்ற செய்தி இன்றைக்கும் நீடிக்கிறது. இச்சூழலில் ஆதரவற்றோர் இல்லமொன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை செய்பவர்களை மிருகத்தனமாக தண்டிக்கும் கேரக்டரை உருவாக்கி அதன் மூலம் ஒரு முரட்டுத் தனமான அன்பானவன் கதையை சொல்லி இருக்கிறார். அப்படி சொல்லி பார்ப்பவர்களின் மனதில் ஒரு பாறாங்கல் போடும் தனது ஸ்டைலில் மறுபடியும் முத்திரை பதித்துள்ளார் டைரக்டர் பாலா
கதை என்னவென்றால் 2004இல் பேரழிவை கொடுத்து விட்டு போன சுனாமியில் அப்பா, அம்மாவை இழந்த சிறுவன் சிறுமி இருவரும் அண்ணன் தங்கையாக வாழ்கின்றனர். அண்ணன் கோட்டி (அருண் விஜய்) வாய் பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளி. கன்னியாகுமரி கடலில் சுற்றுலா படகு ஓட்டி தங்கையையும் காத்தப்படி வாழ்ந்து வருகிறார். அதே சமயம் தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதும் வாடிக்கை. அதனால் அவரது தங்கை உட்பட அவருக்கு உதவியாக வரும் அனைவரும் ஏகப்பட்ட சிக்கல் நேர்கிறது. இதனிடையே, டூரிஸ்ட் கைடாக உலா வரும் டீனா (ரோஷினி), கோட்டியை விரட்டி விரட்டி லவ்வுகிறாள். அந்நிலையில் கோட்டிக்கு ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது நலம் விரும்பிகள், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் கோட்டியை காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். அந்த இல்லத்தில், குழந்தைகள், பெண்கள் என டைரக்டர் பாலாவுக்கு ஆதர்சன்மான பல பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களுடன் எளிதில் ஒட்டிக் கொள்ளும் கோட்டியின் வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டு இருக்கிறது.ஒரு சமயம் அந்த விடுதியில் பெண்கள் குளியல் அறையில் மறைந்திருந்து யாரோ பார்க்கின்றனர். இதை புரிந்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண்கள் அங்கிருந்து வெளியேறி பாத்ரூமுக்குள் யாரோ இருப்பது போல் தெரிகிறது என்று கோட்டியிடம் சொல்ல அவன் அந்த ஆசாமிகளை பிடித்து அடித்து, துவைத்து கழுமரம் ஏற்றி கொன்று விடுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்று போலீசார் விசாரிக்கும் போது போலீஸில் ஆஜராகி நான்தான் கொலை செய்தேன் என்று கோட்டி ஒப்புக்கொள்கிறார் ஆனால் எதற்காக கொன்றேன் என்ற காரணத்தை சொல்ல மறுக்கிறார்.அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க போலீசார் டார்ச்சர் செய்கின்றனர். இந்த நிலையில் இன்னொரு கொலையும் கோட்டி செய்து விடுகிறார்.இக்கொலை ஏன்? அப்புறம் என்னானது என்பதே வணங்கான்.
டைட்டில் கேரக்டரில் கோட்டி என்ற பெயரில் வரும் அருண் விஜய் மாற்று திறனாளியாகவே வாழ்ந்து மிரட்டி இருக்கிறார். பாலா இயக்கத்தில் நடிக்கிறோம் என்று தெரிந்தாலே அந்த ஹீரோக்கள் தங்களது முழு அர்பணிப்பை தந்து விடுவது வழக்கம். விக்ரம் தொடங்கி விஷால் வரை அதைத்தான் செய்தார்கள் . அருண் விஜயும் அதற்கு விதிவிலக்கு அல்ல.தங்கை மீதான பாசத்தை நெஞ்சிலும், பாலியல் குற்றவாளிகளின் மீதான கோபத்தை உச்சி முதல் பாதம் வரையிலும் வைத்து நடிப்பில் சூறை காற்றாக சுழன்று அடித்திருக்கிறார் அருண் விஜய்.கொலை செய்ததற்கான காரணத்தைச் சொன்னால் மாற்றுத் திறனாளி பெண்களின் மானம் பறிபோய்விடும் என்ற காரணத்திற்காக அதை வெளியில் சொல்லாமல் உன்னால் என்ன முடியுமோ செய்து கொள் என்று தன்னிடம் விசாரணை நடத்தும் சிறப்பு போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியிடம் அருண் விஜய் சைகை மூலம் சொல்வதிலேயே ஒரு ஆக்ரோஷத்தையும், அலட்சியத்தையும் அள்ளி வீசி ஸ்கோர் செய்து விடுகிறார்.ஆனாலும் இப்படத்தில் கமிட் ஆன பின்னர் பாலா பழைய படங்கள திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிவதா சோகம்
ஹீரினா நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் நாயகனை ஒருதலையாக காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது என்று டைரக்ட சொன்னதை அசு பிசகாமக் செய்து விட்டு போவதால் கவனம் ஈர்க்கவிலை. அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் அடடே சொல்லை வைத்து விடுகிறார்.ஜட்ஜாக வரும் மிஷ்கின் முழியும், கண்டிப்பும் ரசிக்க வைக்கிறது. சமுத்திரகனி சம்பளம் வாங்காமல் கமிட் ஆகி இருப்பார் போலும்ன் ரோலின் வெயிட்டை உணராமலே வந்தார், போனார். அதே சமயம் சண்முகராஜா, அருள் தாஸ் ஆகியோர் பாஸ் மார்க் வாங்கி போகிறார்கள்.
பாடல்களுக்கு இசை அமைத்துள்ள ஜிவி பிரகாஷ் குமாரின் மியூசிக்கில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்க மட்டுமே உதவுகிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை டைட்டில் கார்ட்டில் மட்டும் தென்படுகிறார்.கேமராமேன் ஆர்.பி.குருதேவ் தன் கைவண்ணத்தில் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி காட்டியிருக்கிறார்.
க்ளைமாக்சை முடிவு செய்து விட்டு கதையை நோக்கி பயணிக்கும் பாலா இந்த வண்ங்கான் படத்துக்காக கொஞ்சம் கூட யோசிக்காமல் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்களி இருந்து சில பல சீன்களை உருவிக் கோர்த்து ஒப்பேற்றி இருக்கிறார்.அவ்வளவே!
மொத்தத்தில் வணங்கான் -பாலாவின் கணக்கில் இன்னொரு படம்
மார்க் 3/5