For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் அப்ரன்டிஸ் பணி வாய்ப்பு!

05:13 PM Sep 13, 2024 IST | admin
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில்  அப்ரன்டிஸ் பணி வாய்ப்பு
Advertisement

ந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை சார்ந்த வங்கிகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற யூ.பீ.ஐ.,க்கு முக்கிய இடமுண்டு. நாடெங்கும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் , தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisement

பணியிடங்கள் எங்கே?

Advertisement

மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் 40 இடங்களும் உள்ளன.

கல்வி தகுதி ?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.944. எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.708. PwBD பிரிவினருக்கு ரூ.472 விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்.

செப்டம்பர் 17ம் தேதி

Tags :
Advertisement