For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இன்றைய அரசியல் சமூக ஊடகங்களின் தர குறைவு!

01:02 PM Jan 06, 2025 IST | admin
இன்றைய அரசியல் சமூக ஊடகங்களின் தர குறைவு
Advertisement

ழுங்கின்மைகளுக்கு முக்கிய காரணமாகிக் கொண்டு வருவது இன்றைய தொழில்நுட்ப இணைய வலைத்தளங்கள் தான். இதில் எந்த ஒரு முட்டாளும் இருந்தாலும் கூட வந்து கருத்து சொல்லலாம் என்று ஆகிவிட்ட பிறகு சமூக நலன் சார்ந்த அரசியல் செயல்பாடுகள் யாவும் தன் ஸ்திரத்தன்மையை இழந்து விடுகின்றன. இதில் சில பத்திரிகையாளர்கள் சில ஊடகவாதிகள் பல முகப்புத்தகவாதிகள் பல இன்ஸ்டாகிராமில் இயங்குபவர்கள் டிவிட்டரில் இயங்குபவர்கள் பலரும் அடங்குவார்கள். எதிர் கருத்து இருக்க வேண்டியதுதான் அதற்காக மனம் போன போக்கில் முட்டாள்தனமாக எதையாவது மறுத்துக் கொண்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு எங்கேயாவது பணம் வாங்கி கொண்டு அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டு சமூக நல்லெண்ணக் கருத்துகளைஅதன் நடைமுறைகளைக் மிக கீழ்தரமாக ஆபாசமாககேலி செய்து கொண்டு எந்த நாகரிகம் இல்லாமல் பின்னூட்டம் இடுகிறார்கள்.

Advertisement

இந்த சமூக வலைத்தள வாசிகள் அனைவரும் வரலாறு தெரியாதவர்கள். போராட்ட மனம் இல்லாதவர்கள். பொழுதுபோக்கிகள் மட்டுமின்றி தத்துவம் பயிலாதவர்கள் !எந்த மெய்மைகள் குறித்த அறிவும் இல்லாமல் அன்றாடத்தில் கூட ஒழுக்கமாக இருக்கத் தெரியாதவர்கள். இதில் பலர் ஆபாசங்களை வஞ்சகமாக சித்தரிப்பவர்கள்.. சுயவக்கிரம் பிடித்தவர்கள் பலர். தங்களின் அடையாளம் என்னவென்று தெரியாமல் அதன் சிக்கலோடு இயங்குபவர்கள். இவர்கள்தான் காலை முதல் இரவு வரை ஊடகத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து இவர்கள் செய்யும் அவலமான பிரச்சாரங்கள் மூலம் சமூக மனமே சிதைவடைந்து இருக்கிறது.

Advertisement

பொதுச் சமூக ஊடகங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்கு மறுப்பு இல்லை. ஆனால் அதற்கு உரிய தகுதி உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது அதனால் ஏற்படும் வாத பிரதிவாதங்கள் நன்மையை நோக்கி இருக்கும் என்பதுதான் நம்பிக்கை. அத்தகையவர்களின் கருத்துக்களை மட்டுமே இந்த இணைய வெளிகளில் மதிக்க முடியும். எந்த பண்புமற்றவர்கள் கலாச்சாரச் சீரழிவுகளைத் தொடங்கி வைப்பவர்கள் எதற்கும் பொறுப்பேற்காதவர்கள் தான் தோன்றிகள் போன்றவர்கள் ஊடகங்களில் நுழைந்து அக்கப்போர்களை உருவாக்குகிறார்கள்.

ஒரு நாட்டின் அதன் தேசியத்தில் நான்காவது தூணான பத்திரிக்கை மற்றும் தகவல் செய்திப் பிரிவுகள் எதற்கும் சோரம் போகாமல் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது தான் தங்கள் கடமை என்று நினைக்க வேண்டும் .அப்படி ஒரு பத்திரிகையாளர்கள் சமூகம் கடந்த காலங்களில் இருந்தது. உலக யுத்தங்களில் எத்தனையோ நேரடி பத்திரிகையாளர்கள் அதன் செய்திகளுக்காகப் போய் இறந்து போயிருக்கிறார்கள். பல நாடுகள் அவர்கள் மீது கெடுபிடிகளை விதித்தும் உயிருக்கு அஞ்சாமல் கடமையாற்றி இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் ஊடக தர்மம் காலாவதியாகி கொண்டு இருக்கிறது. முழுக்க ஆளுமதிகாரத்துக்கு விசுவாசத்தை மட்டுமே காட்டி வாழ்ந்து விடலாம் என்று நினைக்கும் புல்லுருவிகள் அதிகமாகி விட்டார்கள். அவர்களின் செய்திகள் எல்லாம் அவ்வப்போது மறந்தும் கடந்தும் போய்விடக் கூடிய தன்மை உள்ளவை. மாறாக எதிர்கொள்ள வேண்டிய கடமைகள் உண்மையான பணிகள் இருக்கின்றன. அவற்றுக்கான விளக்கங்கள் நடைமுறைகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றுவதற்கும் அதை வற்புறுத்துவதற்கும் உரிமைகளைக் கோருவதற்கும் ஏதுவாக ஊடகங்கள் செயல்பட வேண்டும்.

உண்மையைச் சொன்னால் மக்களுக்கும் இன்றைய ஊடகங்கள் காட்டும் ஆரவாரங்கள்பற்றியதான தெளிவுகள் இல்லை. அதில் வருவதை எல்லாம் நம்பி பல்வேறு குழப்பத்தில் ஆழ்கிறார்கள் .மக்களைப் போல கயவர் என்றார் வள்ளுவர்! ஆனால் உண்மை என்றைக்கும் வெளிச்சத்திற்கு வரும் அதற்கும் இதே பத்திரிகை தர்மம் தான் இடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .ஆகவே சிறந்த ஊடகவாதிகள் இதை மனதில் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுதல்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்

Tags :
Advertisement