உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்ற செக் குடியரசு பெண்!
நம் நாட்டில் இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. ஜியோ சர்வேதச கண்காட்சி அரங்கில் நேற்று இறுதி போட்டி நடந்த . இந்த 71–வது உலக அழகிப் போட்டியில் ‘செக்’ குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா அழகிப் பட்டம் வென்றார்.
130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இந்த போட்டி தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்றைய தினம் (மார்ச் 9) நடைபெற்றது. ஏற்கெனவே உலக அழகியாக இருப்பவர் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா.உலகம் முழுவதும் இறுதி போட்டி ஒளிபரப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இறுதி போட்டியை திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இந்த இறுதி போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றிருந்தனர். இந்தியாவை தவிர மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதன் இறுதிப் போட்டியில், உலக அழகியாக செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதி போட்டியில் வென்ற கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு வென்ற போலாந்து நாட்டு கரோலினா உலக அழகிக்கான மகுடத்தை சூட்டினார்.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மும்பையைச் சோ்ந்த சினி ஷெட்டி பங்கேற்றார். எனினும் அவரால் முதல் 4 இடங்களுக்கு முன்னேற இயலவில்லை.இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றார். உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.