இந்தியாவில் சுத்தமான காற்றுள்ள நகரங்களின் டாப் 10 பட்டியல்!
சுத்தமான காற்று, குடிநீர் எல்லாம் எதிர்காலத்தில் மனிதனுக்கு சாத்தியமா என கேள்வி கேட்கும் அளவுக்கு சுற்றுச் சூழல் மாசடைந்து வருகிறது. அதை முறியடிக்கவும் விஞ்ஞானிகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நகரங்களில் தொழிற்சாலைகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க முடியாமல் நாம் தவித்து வருகிறோம். ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு, போக்குவரத்து நெரிசலின்போது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை ஆகியவை காற்றில் கலந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன. அதிலும் பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் துவங்கியதைத் தொடர்ந்து, முக்கிய நகரங்கள், குறிப்பாக வட இந்தியா முழுவதும், தற்போது கடும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக வட இந்தியா முழுவதும், தற்போது கடும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நகரங்களில் பலவற்றின் AQI-ன் லெவலானது ‘கடுமையான’ மற்றும் ‘மிக மோசமான’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இருக்கும் பல நகரங்கள் தற்போது கடுமையான காற்று மாசுடன் போராடி வரும்நிலையில், மறுபக்கம் இந்தியாவின் பல நகரங்கள் சிறந்த AQI அளவீடுகளுடன் ஒப்பீட்டளவில் சுத்தமான காற்றை அனுபவித்து வருகின்றன.
காற்று மாசுபாடு இல்லாத அல்லது குறைந்த அளவே மாசுபாடு உள்ள இந்தியாவில் உள்ள 'டாப் 10' தூய்மையான நகரங்கள் பட்டியல் இன்று (நவ.,24) வெளியானது.
நகரம் (மாநிலம்)- காற்றின் தரக்குறியீடு- வகை
1. ஐஸ்வால் (மிசோரம்)- 50- நல்லது.
2. பாகல்கோட் (கர்நாடகா)- 46- நல்லது.
3. சாமராஜநகர் (கர்நாடகா)- 44- நல்லது.
4. கவுகாத்தி (அசாம்)- 82- திருப்திகரமானது.
5. கொல்லம் (கேரளா)- 61- திருப்திகரமானது.
6. நாகோன் (அசாம்)- 56- திருப்திகரமானது.
7. ராமநாதபுரம் (தமிழகம்) 68- திருப்திகரமானது.
8. ரிஷிகேஷ் (உத்தரகண்ட்) - 73- திருப்திகரமானது.
9. ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)- 80- திருப்திகரமானது.
10. திருச்சூர் (கேரளா)- 50 - திருப்திகரமானது.
டெல்லியில் இன்று மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. காற்றின் தரம் 366 ஆக மிகவும் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்று தரக்குறியீடு
பூஜ்யம் முதல் 50 - சிறப்பு
51 முதல் 100 வரை - திருப்திகரமானது
101 முதல் 200 வரை - மிதமானது
201 முதல் 300 வரை - மோசமானது
301 முதல் 400 வரை - மிகவும் மோசமானது.
Clean airPollution Control BoardAir quality index