தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு உதவ வரும் தமிழ்நாடு போலீஸ்!

09:36 AM Jun 21, 2023 IST | admin
Advertisement

நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் அரசும், காவல்துறையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் ஆப் செயல்முறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல் துறையின் உதவி எண்களான 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம் என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்கள் பாதுகாப்புக்கு என புதிய திட்டம் ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம்.

Advertisement

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
ladiesnightpoliceTamilnadu Policetravelwomen
Advertisement
Next Article