தெற்கு ரயில்வே அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!
நம் தேசத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான ரயில்வேயில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாகும். இந்த ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் பல நாள் எதிர்பார்த்த ரயில்வே காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு ஒன்றை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள அப்ரென்டிஸ் பணியில் உள்ள 2,438 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337 மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379, சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் - 722 என மொத்தம் 2,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
தெற்கு ரயில்வேயின் இந்த அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஐடிஐ, 10ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கு மேல் 22 இல் இருந்து 25 வயதிற்கு உள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் 15 இல் இருந்து 22 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ஐட்டே விண்ணப்பதாரர்களாக இருந்தால் 15 வயதிலிருந்து 24 வயது வரை விண்ணப்பிக்கலாம். எம்எல்டி விண்ணப்பதாரர்களாக இருந்தால் 15 வயதிலிருந்து 24 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விபரம்:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆட்சேர்ப்பு தொடர்புடைய இணைப்பை கிளிக் செய்யவும். மேலும் அதில் கேட்டுள்ள விவரங்களை அனைத்தையும் பதிவு செய்யவும். அதன் பிறகு உங்கள் புகைப்படம் மற்றும் கட்டைவிரலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு முறை:
அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
கடைசி நாள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி நாள் ஆகும்.