தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ல் தேர்தல் - ஈரோட்டுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல்!

08:23 PM Jan 07, 2025 IST | admin
Advertisement

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து 70 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கி விட்டது. பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந் நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

Advertisement

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “வேட்புமனு தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் ஜனவரி 18-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள். தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.” என அறிவித்தார்.

Advertisement

மேலும் அவர், “டெல்லி தேர்தலில் பண பலம் தடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். முறையான சோதனைகள் நடத்தப்படும். சமூக ஊடகங்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ராஜிவ் குமார், “இன்று மேலும் நான்கு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 99 கோடியை தாண்டியுள்ளது. வாக்களிப்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா பெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலை மேற்கொள்வதில் ஒரு முறையான செயல்முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட விசாரணை இல்லாமல் பெயர்களை நீக்குவது சாத்தியமற்றது. ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்விகளை கேட்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (ஈவிஎம்) வைரஸ் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், இவிஎம்-ல் மோசடிக்கும் சாத்தியமில்லை. இதை உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளில் தொடர்ந்து கூறி வருகின்றன. இவிஎம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

வாக்குப்பதிவு விவரங்களை மாற்றுவது மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது ஆகியவற்றுக்கு சாத்தியமில்லை. மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று 42 முறை நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. ஹேக் செய்ய முடியும் என கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது.” என தெரிவித்தார்.

மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கிளம்பியது. இசூழல்ல் இன்று (ஜனவரி07) டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்தார். உத்தரபிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதை எல்லாம் தாண்டி, தலைமை தேர்தல் ஆணையராக இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.

Tags :
Delhi Assembly ElectionErode byelectionஇந்திய தேர்தல் ஆணையம்ஈரோடுடெல்லிடெல்லி தேர்தல் ஈரோடு இடைத் தேர்தல்
Advertisement
Next Article