For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு ஓட்டம்!

06:54 PM Aug 05, 2024 IST | admin
வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு ஓட்டம்
Advertisement

நாட்டு மக்களின் பெருங்கோபத்துக்கு ஆளான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்று பிரதமர் மாளிகையில் நுழைந்து சூறையாடினர் . இப்படி ஏதாவது நடக்கும் என்று கணித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, டாக்காவிலிருந்து தப்பியதை அடுத்து, அந்நாட்டு ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நான் நாட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்போம். நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது. என் பேச்சுக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். போராட்டங்களைப் பயன்படுத்தி எதையும் தீர்க்க மாட்டோம். அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம், ”என்று தளபதி வேக்கர் கூறினார்

Advertisement

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்பாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உட்பட 88 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷேக் ஷசீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டதுடன் 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகாலம் பிரதமராகவும் தொடர்ந்து 4ஆவது முறையாகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த ஷேக் ஹசீனா தனது வங்கதேசப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டைவிட்டே தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக செய்திகள் வருகின்றன

இத்தனைக்கும் வங்கதேசத்தின் முதல் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Sheikh Mujibur Rahman) மகள்தான் ஷேக் ஹசீனா. 1975-ல் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும்பாலானோர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஐரோப்பாவில் இருந்த ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசம் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்தார் ஷேக் ஹசீனா. 6 ஆண்டுகள் கழித்து அவாமி லீக் கட்சித் தலைவராக 1981-ல் வங்கதேசம் சென்று பொறுப்பேற்றார்.தொடர்ந்து ஷேக் ஹசீனா, வங்க தேசத்தில் 1996 முதல் 2001 வரை முதல்முறையாகப் பிரதமர் பதவி வகித்தார். இவர்தான் சுதந்திரத்துக்குப் பிறகு, 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்த முதல் பிரதமர் ஆவார். ஏற்கெனவே இவர்மீது மொத்தம் 19 முறை படுகொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன. 2004-ல் நடந்த கையெறி குண்டு தாக்குதலில், அவரின் செவித்திறன் அடியோடு குறைந்தது. தொடர்ந்து 2009 முதல் 2024 வரை இவரே பிரதமராக இருந்தார். உலகில் அதிக காலம் நாட்டை ஆண்ட பெண் என்ற பெருமை அவருக்கே இருந்தது. எனினும் தற்போதைய போராட்டத்தால் நான்காவது முறையாகத் தொடர்ந்து பிரதமர் ஆகியும், நாட்டே விட்டே தப்பி ஓட வேண்டிய அவலம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் சோகம் .

Tags :
Advertisement