தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட்!

12:50 PM Jan 05, 2024 IST | admin
Advertisement

ட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை ஐகோர்ட் உத்தரவு சரியானதே என்றும் கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி 2011-15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அப்போது திமுக அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட்டை நாடினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றங்கள் நிராகரித்தன. இதற்கு நடுவே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ஆளுநர் ரவி. இருப்பினும் இன்று வரை செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.

இந்நிலையில், ‘இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அந்த பதவியில் நீட்டிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி-யான ஜெயவர்த்தன், வழக்கறிஞர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதேபோல் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும், இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் தங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்குகளை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு சரியானது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
Cm Mk StalinEDGovernorhighcourtjailMinistersenthi balajiSupreme Courttn
Advertisement
Next Article