சட்டம் என் கையில் விமர்சனம்!
காமெடியில் கலக்கி வந்த வடிவேலு சந்தானம் சூரி எல்லாம் ட்ராக் மாறி போன லிஸ்டில் தானும் ஒரு நாயகனாகி சேர்ந்து விட வேண்டும் என்று ஆசைப்படும் சதீஷ் அடுத்தடுத்து அவருக்கான வேடங்களை ஏற்று நடிக்க ட்ரை பண்ணி வருகிறார். ஆனால் படம் முழுக்க 'இதுக்கு நான் சரிவர மாட்டேன்' என்று அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகிறார். அதிலும் முதல் காட்சியில் கார் ஓட்டி வந்து போலீஸ் பிடியில் சிக்கி ஸ்டேஷனில் உட்காரும் சதீஷ் கிட்டத்தட்ட இறுதிக்காட்சி வரை அதே ஸ்டேஷனில் காலத்தை கழிக்கிறார். கார் டிக்கியில் மறைத்து வைத்திருக்கும் பிணத்தை போலீசார் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவ்வப்போது சில தில்லு முல்லு வேலைகளை செய்து காமெடியன் வேலைகளையம் செய்கிறார்.. அவ்வளவே..!
அதாவது கும்மிருட்டில் மலைப் பாதையில் வேகமாக காரோட்டி வரும் சதீஷ், திடீரென்று ஒரு பைக் மீது மோதுகிறார். இதில் படுகாயமடைந்த ஹெல்மெட் அணிந்த ஆசாமி பேச்சுமூச்சின்றி கிடக்க, அவரை ரத்தம் சொட்டச்சொட்ட இழுத்துச்சென்று, கார் டிக்கியில் மறைத்து வைக்கிறார். நடுவழியில் போலீசாரின் சோதனையில் சிக்கிய சதீஷ், டிரங்க் அன்ட் டிரைவ் கேஸில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், போலீஸ் பாவெல் நவகீதனின் கன்னத்தில் அறைந்த சதீஷ், போலீஸ் லாக்கப்பில் வைத்து லத்தியால் செமத்தியாக கவனிக்கப்படுகிறார். அதே இரவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலையாளியை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அப்போது இன்னொரு போலீஸ் அஜய் ராஜூக்கும், பாவெல் நவகீதனுக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதலால் கடுமையாக பாதிக்கப்படும் சதீஷ், கொலையாளி என்று குற்றம் சாட்டப்படுகிறார். பைக்கில் வந்த ஆசாமியை சதீஷ் கொன்றாரா? அஜய் ராஜூக்கும், சதீஷ் தங்கை ரித்திகாவுக்கும் என்ன பகை என்ற மூன்று முடிச்சுகளை அவிழ்ப்பதே சட்டம் என் கையில் படக் கதை.
கேஷூவல் போலீசாக வந்து அலற வைக்கிறார் காலம் சென்ற இ.ராமதாஸ். அவருடன் ரொம்ப அமைதியான அதே சமயம் அட்ராசிட்டி போலீசாக வருகிறார் பவா செல்லத்துரை.மேலும் தாதா அல்லது போலீசாக மட்டுமே வரும் மைம்கோபி, இதில் இன்ஸ்பெக்டராகி இருக்கிறார். அந்த தாடியையும் மீசையையும் எந்த காலத்திலும் ஷேர் செய்ய முடியாது என்பதால் அவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதாக எளிதாக பிரச்சினையைத் தீர்த்து விடுகிறார் டைரக்டர்.
அவர் பதவிக்கு குறிவைக்கும் அஜய் ராஜின் வில்லத்தனமும் மிகையில்லாமல் இருக்கிறது.
சதீஷின் தங்கையாக வரும் ரித்திகாவுக்கும், இன்னொரு கேரக்டரில் வரும் வித்யா பிரதீப்புக்கும் சின்னச் சின்ன வேடங்கள்.
எம் எஸ் ஜோன்சின் இசையும், பிஜே முத்தையாவின் ஒளிப்பதிவும் இந்த திரில்லர் கதைக்கு வலூவூட்ட தவறி விட்டன.
க்ரைம் கதை என்பதால் முழுக்க முழுக்க அதில் மட்டுமே டைர்க்டர் சாச்சி கவனம் செலுத்தி இருப்பதால் காட்சிகளில் காட்டிய அக்கறையை சட்டம் என் கையில் என்ற டைட்டிலில் கமல் ரோலில் சதீஷை வைத்து ஒரு படமெடுத்து ரிலீஸ் செய்து விட்டார்..அவ்வளவே!
மார்க் 2.25/5