தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உங்கள் வாகனத்தில் ஏதாச்சும் ஸ்டிக்கர் உண்டா?வழக்கம் போல் போலீஸ் எச்சரிக்கை!

01:02 PM Apr 28, 2024 IST | admin
Advertisement

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் நபர்கள் தாங்கள் வேலை செய்யும் துறைகளின் பெயர்கள் மற்றும் அதற்கான லோகோவை ஸ்டிக்கர்களாக தங்களின் வாகனங்களில் ஒட்டுவது வழக்கம்.. !அதை ஒட்டி தமிழக தலைநகரம் சென்னை டிராஃபிக் போலீஸ் மட்டும் அவ்வப்போது இங்கு இயங்கும் தனியார் வாகனங்களில் பத்திரிகை, மீடியா, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் ஒட்டப்படுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது அரசு வாகனங்களை தவிர பிற வாகனங்களில் உள்ள எண் தகட்டிலும், வாகனங்களின் பிற பகுதிகளிலும், ஸ்டிக்கர்கள், சின்னங்கள் போன்ற அடையாளங்களை இனி ஒட்டக்கூடாது என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மறுபடியும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பெரும்பாலும், சென்னை மாநகரில் உள்ள வாகனங்களின் எண் தகட்டில், பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வாகனங்களின் வேறு பகுதியிலும் ஒட்டப்படுகிறது. இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள், எழுத்துக்களை தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்வதாக கருதப்படுகிறது.

இதேவேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள். இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய மே 1ஆம் தேதி வரை கால-அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல், MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆண்டாண்டு தெரிவிக்கும் எச்சரிக்கைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
chennaitrafficnumber platePrivate Vehiclerestrictionsticker!traffic policeUnauthorized StickeringVehicleசென்னைடிராபிக்நம்பர் பிளேட்பதிவெண் பலகைபோக்குவரத்து போலீஸ்வாகனம்ஸ்டிக்கர்
Advertisement
Next Article