வேட்டையாட தயார் - அமெரிக்க எஃப்.பி.ஐ. டைரக்டர் படேல் சூளுரை!
ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். அடிசினலாக உலகளவில் பல்வேறு நாடுகளில் ஊடுருவி வேவு பார்ப்பதும் இந்த அமைப்புதான். இந்த பவர்ஃபுல்லான அமெரிக்காவின் எப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை (Federal Bureau of Investigation–FBI)யின் இயக்குநராக இந்திய வம்சாவளியான காஷ் படேலை நியமிக்க, அமெரிக்காவின் செனட் அவையில் நேற்றிரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், காஷ் படேலை அவர் இந்த பொறுப்பில் நியமித்தார். 2016 இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததை படேல் கண்டுபிடித்தார். படேலின் குற்றச்சாட்டை CIA, FBI மற்றும் NSA ஆகியவை உறுதி செய்தன.
இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாகத்தான் ரஷ்யா வேலை செய்தது. இருந்தாலும், உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடுவதை டிரம்ப் விரும்பவில்லை. எனவே படேல் செய்த செயலுக்கு பரிசாக அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்றிரவு செனட் வாக்கெடுப்பு நடந்தது. அதில், படேலுக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிர்ப்பாக 49 வாக்குகளும் விழுந்தன. இறுதியாக பெரும்பான்மை அடிப்படையில் படேல் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எஃப்பிஐ இயக்குநரான பின்னர் அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தன்னை இயக்குநராக்கிய டிரம்ப்புக்கு நன்றி சொன்ன படேல், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
காஷ் படேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் 9வது இயக்குநராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். அதிபர் டிரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக நன்றி. இயக்குநராக எனது பணி தெளிவாக உள்ளது: நல்ல போலீசார் போலீசாராக இருக்கட்டும் – FBI மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம். அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்களுக்கு, இந்த கிரகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்''என பதிவிட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.