For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புது யுகம் டிவி சேனலில் “பொங்கல் திரைத் திருவிழா”! -பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி!

05:55 AM Jan 13, 2025 IST | admin
புது யுகம் டிவி சேனலில் “பொங்கல் திரைத் திருவிழா”   பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி
Advertisement

மிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கும் திரைப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு பல்லாண்டுகளாக தொடர்கின்றன. பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்குப் பொதுவான பிற நாட்களில் வெளியிடப்படும் படங்களை விடவும் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே, இப்படிப்பட்ட பண்டிகைப் படங்கள் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியவர்களைக் கொண்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்களில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே நடக்கும். ஒன்று – படங்கள் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக மாறுவது; இதன்மூலம் நடிகர்களுக்கும் இயக்குநருக்கும் புகழ் கிடைத்து, அவர்கள் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் உருவாகின்றன. இரண்டு – இப்படங்கள் நன்றாக ஓடாமல் அதே நடிகர்ளையும் இயக்குநரையும் இனிவரும் புதிய திறமையாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கவும் வைத்திருக்கின்றன.அந்த வகையில் பொங்கல் நாளன்றோ அல்லது பொங்கலை முன்னிட்டோ தமிழில் வெளியிடப்பட்ட படங்களை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisement

அதாவது 90 களுக்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பால்யத்தில் தியேட்டர் வாசல்களில் காத்திருக்கும் வேளைகளில் கேட்கக் காத்திருக்கும் போது சிலிர்க்க வைக்கும் வார்த்தை. ‘பொட்டி வந்திருச்சிடோய்...’ தீபாவளி, பொங்கல்களுக்கு புதுப்படங்கள் ரிலீஸாவது ஒரு விஷேசம் என்றால், புதுப்படங்கள் ரிலீஸாவதும் கூட தீபாவளி, பொங்கல் பண்டிகைதான்.இப்போது கியூ ஆர் கோடுகளோடு, பாஸ்வேர்டுகளோடு கண்ணுக்குப் புலப்படாத அட்வான்ஸ் டெக்னிக்குகளோடு ஐக்கியமாகிவிட்டோம். குறிப்பாக 2000த்தின் ஆரம்பத்தில் டிஜிடல் படங்கள் வரத் தொடங்கியபோது சினிமாவின் போக்குகள் பல வழிகளில் மாற ஆரம்பித்து விட்டன. அப்போதெல்லாம் மிக முக்கிய எதிர்பார்ப்பு கொண்ட ரஜினி, கமல் படங்கள் கூட தமிகமெங்கும் 40 முதல் 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகும். சென்னையில் அதிகபட்சம் நான்கே தியேட்டர்களில்தான் பெரிய படங்களே ரிலீஸாகும். தேவியில் ரிலீஸானால் சாந்தியில் படம் போட முடியாது. உதயம் காம்ப்ளக்ஸில் ரிலீஸானால் கமலாவில் போட முடியாது. அபிராமியில் போட்டால் ஈகா, சங்கம் தியேட்டர்களில் போடக்கூடாது. இது போக வட சென்னையில் அகஸ்தியா போன்ற ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகள் போடப்படும். ஆக சென்னையில் எவ்வளவுபெரிய படமாக இருந்தாலும் மொத்தமே 15 காட்சிகள்தான்.

Advertisement

ஆனால் இன்று சினிமாவும் ஃபாஸ்ட் புட் சமாசாரம்தான். முதல் மூன்று நாட்களிலேயே மக்களின் மொத்தப்பணத்தையும் ஸ்வாஹா செய்துவிட வேண்டும் என்கிற நோக்கில் பல படங்கள் சென்னையில் மட்டுமே 300 காட்சிகள் வரை திரையிடப்படுகின்றன. மாயாஜால் சினிமாவில் சில படங்களை 60 காட்சிகள் வரை ரிலீஸ் செய்கிறார்கள். தமிழகம் முழுக்க 800 தியேட்டர்கள் வரை ஸ்வாஹா செய்துவிடுகிறார்கள்.தமிழகத்தில் சுமார் 1100 தியேட்டர்கள் இருக்கும் நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் கனவும் தங்கள் படம் அத்தனை தியேட்டர்களிலும் ரிலீஸாக வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இப்படியாக இன்றும் பொங்கும் ஊற்றாய் திகழும் தமிழ் திரை உலகிற்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கும் எப்போதும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னரே சொன்னது போல் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் திரைப்படங்களையும் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.அதை கவனத்தில் கொண்டு MGR, சிவாஜி காலம் தொடங்கி தற்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை நடித்து வெளியான திரைப்படங்களின் வெற்றி அவற்றின் சிறப்பம்சம், மறக்கமுடியாத பாடல்கள் என சகல நிகழ்வுகளையும் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பங்கேற்று அலசும் ஓர் பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி “பொங்கல் திரைத் திருவிழா”.

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14 மற்றும் 15 காலை 8.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார் .

Tags :
Advertisement