For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விவசாயிகளுக்கு 'பொங்கல் பரிசு'-வெந்தபுண்ணில் வேல்!

12:26 PM Jan 13, 2025 IST | admin
விவசாயிகளுக்கு  பொங்கல் பரிசு  வெந்தபுண்ணில் வேல்
Advertisement

டந்த காலங்களில் வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்கள் - விவசாயிகள் வருடம் ஒரு முறை புதுப்பித்து ரினிவல் செய்து வட்டியை மட்டும் செலுத்தி மீண்டும் புதுப்பித்து வந்தார்கள். இந்த முறை மாற்றப்பட்டு கடந்த 1-1.2025 ஜனவரி முதல் ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர் வைக்கும் தங்க நகை கடன் முறையில் மாற்றம் செய்து அசலையும் வட்டியையும் சேர்த்து பணத்தை செலுத்தித்தான் புதுபிக்க வேண்டும் என்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். விவசாயிகள் கஷ்ட்டத்துக்காக தங்கள் நகைகளை அடகு வைத்து அதில் வரும் பணத்தை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம் இப்படி இருக்கும் வேலையில் அசலையும் வட்டியும் செலுத்தி ரினிவல் செய்வது விவசாயிகளை கடன்சுமை அதிகமாவது தவிற இந்த முறையால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.

Advertisement

ஒருவர் ரூ 3 லட்சம் நகை கடன் வாங்கி விட்டு வங்கிக்கு சென்று ரினிவல் செய்யும் போது அசலையும் கட்டுவதற்கு அவ்வளவு பெரிய தொகையை எப்படி வாங்கி செலுத்துவது என்று விழி பிதுங்கி நிற்கிறோம். வெளி நபரிடம் கடன் வாங்கி தான் அந்த ஒரு நாளுக்காக கட்ட வேண்டி உள்ளது .அதற்கு - 2 ரூபாய் வட்டிக்கு வாங்கி வங்கிக்கு கட்ட வேண்டி உள்ளது. அதுவும் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க கடன் கொடுப்பவர்கள் நில பத்திரத்தை கேட்கிறார்கள். இதனால் விவாசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்த ஒரு நாளில் கட்ட முடியாமால் நகைகள் ஏலத்துக்கு போகும் நிலைமையில் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலையில் உள்ளோம்.

Advertisement

வருடம் 6000 விவசாயிகளுக்கு கொடுத்து விட்டு 4% (33) பைசாவில் விவசாய நகை கடன்களுக்கு கொடுத்து வந்த மானியத்தையும் இந்த வருடம் நிறுத்தி விட்டார்கள் இதுவும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது காலங்காலமாக கொடுத்து வந்த இந்த மானியத்தை மத்திய அரசு ஏன் நிறுத்தி விட்டது என்று தெரியவில்லை.நாட்டில் முதுகெலும்பாக மழை காலம் வெய்யில் காலம் என்ற வியர்வை சிந்தி நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு இந்த நிலமை ? இதை நினைத்து நாங்கள் கண்ணீர் விடுகிறோம்.

எனவே உடனடியாக மத்திய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு 4% (33 )பைசாவில் கொடுக்க கூடிய தங்க நகை கடன்களுக்கு மானியத்தை உடனே விடுவிக்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசலுடன் வட்டியை சேர்த்து செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் பழைய முறையே வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக விவாசாயிகள் சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் மத்திய அரசு கவனத்துக்கு செல்ல வேண்டும் 😭😭😭😭😭

இப்படிக்கு

வேட்டவலம் K. மணிகண்டன்
மாநில தலைவர்
தமிழக விவசாயிகள் சங்கம்

Tags :
Advertisement