தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமைதி பூங்காப்பூ - கவர்னர் ரவிக்கு தமிழக போலீஸ் வீடியோக் காட்சியுடன் பதிலடி!

07:32 PM Oct 27, 2023 IST | admin
Advertisement

இரண்டு நாட்களுக்கு நேற்று முன்தினம் தமிழக கவர்னர் மாளிகை முன்பு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு (தடுப்பு பலகை) மீது கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் பாட்டில் வீசினான். ராஜ்பவன் முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை போலீசார்ர் கைது செய்து. அவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து , எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தங்கள் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்பது போல பதிவிட்டு இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

அந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக ஏற்கனவே காவல் துறையினர் விளக்கம் அளித்து இருந்த நிலையில், இன்று மீண்டும், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து சிசிடிவி காட்சிகளை காண்பித்து விளக்கம் அளித்தனர்.அதில் முதலில், குற்றவாளி கருக்கா வினோத் நந்தனம் கலை கல்லூரி வழியாக கையில் ஒரு பையுடன் நடந்து செல்வது காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற சிசிடிவி கேமிராக்கள் மூலம், சைதாப்பேட்டை பாலம் வழியாக நடந்து வருவது காண்பிக்கப்பட்டு , உடன் யாரும் இல்லை தனியாக தான் கருக்கா வினோத் ஒரு பையுடன் வருகிறார் என காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Advertisement

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Video-2023-10-27-at-1.53.10-PM.mp4

மேலும், ``சர்தார் படேல் சாலையில், கவர்னர் மாளிகை எதிர்புறம் உள்ள ரோட்டின் அந்த பக்கம் இந்த ரவுடிகருக்கா வினோத் நின்று கொண்டு பெட்ரோல் பாட்டில்களை சாலையின் அந்த பக்கம் வீசியுள்ளார். இது பேரிகார்டு (தடுப்பு பலகை) பக்கம் விழுந்துள்ளது. மாளிகை நோக்கி கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. மேலும் கருக்கா வினோத் எங்கும் ஓடவில்லை. அங்கேயே தான் நிற்கிறார். அத்துடன் கவர்னர் மாளிகை ஊழியர்கள் யாரும், யாரையும் பிடிக்கவில்லை. 5 சென்னை காவல்துறையினர் தான் கருக்கா வினோத்தை வெளியில் உள்ள சாலையில் பிடித்துள்ளனர்.

அவனிடம் இருந்து 2 பெட்ரோல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முற்படவில்லை.`` என ராஜ்பவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் குறித்தும், அன்று உண்மையில் நடந்தது என்ன என சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான உயர் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி மயிலாடுதுறை சம்பவம் குறித்தும் விளக்கம் அளித்தனர். அந்த சம்பவம் பற்றி கூறுகையில், மயிலாடுதுறைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று கொண்டிருக்கும் போது கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் ஆளுநர் வாகனம் மீது வீசப்பட்டது. இதில் உடல் ரீதியாக ஆளுநர் பாதிக்கப்பட்டார் என்றும், கவர்னர் மாளிகை தரப்பில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவது உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக இன்னொரு சிசிடிவி காட்சிகளை காண்பித்து, ஆளுநர் ரவி மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க நின்றவர்களை மறைக்கும்படி, காவல்துறை வாகனம் அவர்களை மறைத்துவிட்டது. அதனையும் மீறி ஒரே ஒரு கொடி மட்டுமே கவர்னர் வாகனம் மீது விழுந்தது. அதனால் கவர்னர் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. அத்துடன் கவர்னர் மாளிகை கொடுத்த புகாரை ஏற்கவில்லை என்று கூறுவது உண்மையல்ல.

சம்பவம் நடந்தது ஏப்ரல் 19ஆம் தேதி காலையில். அன்று மாலையே 73 பேர் கைது செய்யப்பட்டனர். 53 சாட்சியத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம் என மயிலாடுதுறை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் கொண்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது.

இதை எல்லாம் தாண்டி, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
GovernorMyladuduraiPeace ParkPetrolbottleRajbhvanRaviTamil Nadu policevideo footage
Advertisement
Next Article