ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனால் ஏழு கட்டதேர்தல் ஏன்?
பொதுவாக இடது சாரி சிந்தனையாளர்கள் என்பதை விட மோடி எதிர்ப்பாளர்கள் கேட்கும் கேள்வி ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லும் அரசு ஏன் ஏழு கட்டமாக தேர்தல் நடத்துகிறது என்பதும் மோடி ஆதரவாளர்கள் அதற்கு முட்டு கொடுப்பது என்பதும் அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா! எதிர்ப்பாளர்கள் அதற்கான தேவையை சொன்னால் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள், ஆதரவாளர்கள் அதற்கு சரியான பதில் சொல்வதும் இல்லை. நாம் நமது புரிதலுக்காக அரசியல் கடந்து இதை பார்க்க வேண்டும். அதற்கு பொருளாதார ரீதீயிலும், தார்மீக ரீதியியிலும், அரசியல் ரீதியிலும் காரணங்கள் உண்டு. அதை கேட்க வேண்டுமெனில், நாம் முதலில் நமது அரசியல் சார்பு நிலையை துறந்து நாடு என்பதை நமக்கு மேலாக பார்க்க வேண்டும்!
அவை
1️⃣ தேர்தலின் போது 30,000 அல்லது 10% மத்திய பாதுகாப்பு படை போலிஸார் பயன்படுத்தப் படுகிறார்கள். அது மட்டுமல்ல, அதற்கு சமமான போலீஸார் தயார் நிலையில் மத்திய அரசாங்கந்திடம் இருப்பார்கள். மத்திய அரசு ஒரு சேர தேர்தல் நடந்தால், கிட்டத்தட்ட 70% போலிஸார் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது ரிசர்வாக வைத்திருக்கும் போலீஸார் வெறும் 30%. அப்போது நமது பாதுகாப்பு படையினர் நாடுமுழுவதும் இருக்கும்போது, நமது அண்டை நாடுகள் நம் மீது தாக்குதல் செய்தால், நம் படைகளை எல்லைக்கு கொண்டு செல்வதில் பெரும் பிரச்சினை ஏற்படும். மேலும் உள் நாட்டில் ஒரு சில இடங்களில் பிரச்சினை வந்தாலும், அவர்கள் Strategic place ல் இல்லாததாலும், நமது படைகள் எங்கே இருக்கிறது என்பது எதிரி நாடுகளுக்கோ, எதிரிகளுக்கோ தெரியும் என்பதால் அதற்கேட்ப தாக்குதல்களை செய்வார்கள். அவர்களை பிரச்சினைக்குரிய இடத்திற்கு கொண்டு செல்ல காலதாமதமாகும். அது நாட்டுக்கு ஆபத்தானதும் அதை தவிர்த்தல் மிக அவசியம். எனவே ரிசர்வாக இருக்கும் படைகள் எப்போதும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்!
2️⃣ பாதுகாப்பு போலிஸாருக்கு ஏற்படும் செலவவினங்கள் ஒரு சேர தேர்தல் நடத்தினால் குறைந்தது 5 மடங்கு அதிக செலவாகும். தேர்தல் செலவினங்களை குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.
3️⃣ ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பாதுகாப்பு போலீஸார் எண்ணிக்கை, அண்டை மாநிலத்தில் இருக்கும் ரிசர்வ் பாதுகாப்பு படையின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டமிடுவார்கள். பொதுவாக அவர்களின் பயண தூரம் என்பது குறைவாக இருக்கும் விதத்தில் அந்த திட்டமிடல்கள் இருக்கும். அதில் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் வன்முறைக்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் தேர்தலில் ஓட்டுக்கு பணம் போன்றவை பெரிய சிக்கல். எனவே, தமிழகத்தில் அதற்கு நேரம் கொடுக்காமல் விரைவில் தேரதலை ஒருசேர முடித்து விட்டார்கள்.
4️⃣ மத்திய அரசிடம் என்னதான் பாதுகாப்பு படைகள் இருந்தாலும், அதை ரிசர்வ் ஃபோர்ஸாகத்தான் பயன்படுத்த வேண்டும். பிரதானமாக மாநில அரசின் போலீஸாரைத்தான் உபயோகிக்க வேண்டும். அதுதான் ஃபெடரலிஷத்தின் குறிக்கோள் என்பதாலும், ராணுவத்தை தேர்தலில் பயன்படுத்துவது என்பது பொதுவாக மக்கள் உரிமைக்கு எதிராக உலக நாடுகளால் பார்க்கப்படும் என்பதாலும், அவற்றை குறைப்பது அவசியம்.
5️⃣ இதுமட்டும்தான் காரணமா? அதில் அரசியலே இல்லையா? இருக்கிறது. இன்று இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்று மோடி சொல்கிறார். அப்படியெனில் சென்ற தேர்தல் கட்டங்களைவிட குறைவாக இல்லாவிட்டாலும், அதிகரிக்க கூடாது அல்லவா? நியாயமான கேள்வியே! தாக்குதல்கள் என்பது வெறும் படைகளை வைத்து மட்டும் தாக்கமாட்டார்கள். இன்று மீடியாவில், சோஷியல் மீடியா, பத்திரிக்கைகள் நாட்டுக்கு எதிரான என்பதைவிட ஆளும் கட்சிக்கு எதிராக செய்திகளை தேர்தல் நேரத்தில் வெளியிடுகிறது. அதன் உணமைத்தன்மை மக்களுக்கு தெரியு முன் அது வைரலாகி தேர்தலில் பெரியளவில் எதிரொலித்துவிடும் அளவிற்கு இன்று தொடர்புகள் அதிகம். அது போன்ற வெளிநாட்டு சதிகள் அமெரிக்கா, கனடா முதல் சீனாவரை திட்டமிட்டிருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், அரசு அதற்கான மாற்று யுக்தியாக ஏழு கட்ட தேர்தலை கையாண்டு உள்ளது.
இப்போது அதிகபட்சமாக முதல் கட்ட தேர்தலில் தான் 102 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மற்றவை அதைவிட குறைவு என்பதால் வெளிநாட்டு சதியாளர்கள் அந்த திட்டமிட்ட சதியை ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய முடியாது என்பதால், இந்த ஏழு கட்டம் என்ற இதுவரை என்றும் நடக்காத அளவில் நடக்கிறது. இதை தேர்தல் கமிஷந்தான் முழுதாக தீர்மானிக்கிறது என்றால், மேற்சொன்ன ஆலோசனைகளை மத்திய அரசிடம் இருந்த மட்டுமல்ல, மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் கருத்தக்களை கேட்டு வாங்கி அதற்கேற்பவே தீர்மானிக்கிறது. அதில் மத்திய அரசின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது மறுக்க முடியாதது.
இப்போதும் மத்திய அரசின் ஏழு கட்ட தேர்தல் திட்டமிடல்கள் தவறு என்று நினைக்கிறீர்களா? இருக்கலாம், அது தவறு என்றால் அதற்கு உங்களிடம் இருக்கும் மாற்று ஏற்பாட்டையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்!