For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியது!

01:07 PM May 10, 2024 IST | admin
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியது
Advertisement

கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர இங்கு ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இந்த வருடம் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கொடை விழாவை தவிர்த்து மலர் கண்காசி மற்றும் பழ கண்காட்சி மற்றும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சென்ஸ் பூங்காவில் பல கண்காட்சி மட்டும் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

Advertisement

அதன்படி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சியை மலர்கள் காட்சியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா ஆகியோர் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கி வைத்தனர். வரும் மே இருபதாம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

Advertisement

இந்த மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேனியல், பால்சம், ரெனன்குலஸ வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு என பல்வேறு வகையான சுமார் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சுமார் 1 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட ஆக்டோபஸ் டிஸ்னி வேர்ல்ட் என பத்து வகையான கண்ணை கவரும் அலங்காரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ரங்கோலி வனவிலங்குகள் அலங்கார விளைவுகளாக எவையும் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மலர் கண்காட்சி துவங்கும் தினத்திலும் நிறைவடையும் இருபதாம் தேதி என இரண்டு நாட்களுக்கு லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்திலான டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி மற்றும் அந்த கதாபாத்திரத்தில் வரும் சிறுவர்கள் ஆகியவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் உதகை மலை ரயில் குகையில் இருந்து வெளியில் வருவது போல 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் மலர்களை கொண்டு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 126 வது மலர் கண்காட்சி மலர் பதாகை முப்பதாயிரம் கொய் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த நிலைகள் தற்போது இன்று மலர் கண்காட்சி துவங்குவதால் மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்று தெரியவில்லை.

Tags :
Advertisement