For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நேசிப்பாயா - விமர்சனம்!

09:37 PM Jan 15, 2025 IST | admin
நேசிப்பாயா   விமர்சனம்
Advertisement

வ் & ஆக்ஷன் என்ற கண்டெண்ட் டைரக்டர் விஷ்ணுவர்தனுக்கு புதிதல்ல. 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'சர்வம்' என தமிழிலேயே விஷ்ணுவர்தன் இதற்கு முன் இந்த களத்தில் பல அட்ராக்டிவ் முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதுவும் புதுமுகங்கள் அல்லது மக்களுக்கு பரீட்சயம் குறைந்த முகங்களை மக்கள் மனதில் பதிய வைக்கும் இயக்குநராகவும் அறியப்பட்டவர் விஷ்ணுவர்தன். அப்பேர்பட்டவர் வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் நாயகிக்கு பிரச்சனை, அதில் இருந்து அவரை காப்பாற்றும் நாயகன், என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு வழக்கம் போல் காதல், ஈகோ, அதனால் பிரிவு, மீண்டும் ஈர்ப்பு, கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் என ஆகியவற்றை கலந்து பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் மென்மையான காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.

Advertisement

கதை என்னவென்றால் ஹீரோ ஆகாஷ் முரளி , நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் பொதுக்கடீர் என்று காதலில் விழுகிறார். இதை அடுத்து அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். ஆகாஷ் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.ஒரு சூழலில்ஆகாஷ் முரளி தற்செயலாக டிவி செய்தியை பார்க்கும் பொழுது தன்னுடைய காதலி ஆதிதி சங்கர் போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைப்பதை பார்த்து விடுகிறார். இதனால் ஷாக் ஆன அவர் உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார். அவர் நாயகியை காப்பாற்றினரா?, கொலைக்கான பின்னணி, அதில் நாயகி அதிதி ஷங்கர் சிக்கியது எப்படி? என்பதை காதலும், மோதலும் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’.

Advertisement

புது முக நாயகன் ஆகாஷ் முரளியிடம் பல இடங்களில்'அதர்வா' தலைக் காட்டுகிறார். குரலில் இருவருக்கும் ஒற்றுமை இருப்பது நியாயம். ஆனால், பாடி லேங்குவேஜ், முக பாவங்கள் ஆகியவற்றிலும் 'அதர்வா' தெரிவதை தவிர்க்க முயல்வது அவசியம்.. அதையும் தாண்டி ஆக்‌ஷன், ரொமான்ஸ், ஆக்டிவ்னெஸ் என தனது முழு திறமையையும் வெளிக்காட்டக்கூடிய சகல வாய்ப்புகளையும் நாயகன் ஆகாஷ் முரளி சரியாக பயன்படுத்தி கவர்ந்து விடுகிறார். நாயகி அதிதி நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். அதிலும் காலேஜ் ஸ்டூடண்ட் மற்றும் வாழ்க்கையை உணர்ந்த பக்குவப்பட்ட பெண் என ஒரே ரோலில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், அவரது நடிப்பு கொஞ்சம் கூட் எடுபவில்ல. அதிலும் சில சீன்களில் இவரைக் கண்டாலே வெறுப்பு தலை தூக்கி விடுகிறது..!

பெரும் தொழிலதிபராக போர்ச்சுகலில் உள்ள சரத்குமாரும், அவரது மனைவியாக வரும் குஷ்புவும் கம்பீரம். மகன் இறந்த துக்கத்தை அமைதியாகவே கடக்கும் சரத்தும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் குஷ்புவும் அதிதியை மன்னிக்கத் தயாராகவே இல்லை என்ற ஃபீலிங்கை கடத்துவதில் ஸ்கோர் செய்து விடுகிறார்கள்.
பல காலம் கழித்து ‘ கடலோரக் கவிதைகள்’ ராஜா, இதில் சரத்தின் பிரியத்துக்குரிய நண்பராக வருகிறார். காட்சிகளுக்கு விக்கல்ஸ் விக்ரம் பொறுப்பேற்று இருக்கிறார். அதை ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.வக்கீலாக வரும் கல்கி கோச்சலின் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு கல்கி அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். வக்கீல் கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வை செய்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவருக்கும் ஆகாஷ் முரளிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி ஆங்காங்கே கலகலப்பை கூட்டி இருக்கிறது.

மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகி விட்டது என்றாலும் பின்னணி இசையில் வழக்கம் போல் வாவ் சொல்ல வைத்து இருக்கிறார். இந்தப் படத்திற்கு இவர்தான் பக்கபலமாக இசையமைத்து ஒட்டு மொத்த படத்தையும் கரை சேர்க்க உதவி செய்திருகிறார் என்றே சொல்லலா. கேமராமேன் கேமரூன் எரிக் ப்ரெசென் ஒளிப்பதிவில் ஃபாரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டம். அதேபோல் காதல் காட்சிகளையும் குளிர்ச்சியாக படம் பிடித்து கவர்கிறார்.

டைரக்டர் விஷ்ணுவர்தன் தனக்கே உரித்தான காதல் காட்சிகளை மிகவும் பிரஷ்ஷாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிப்படுத்தி, வழக்கு ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் சரியான ஸ்கீரி பிளேயுடன் கொண்டு போய் ரசிகர்களுக்கு அயற்சி ஏற்படாதவாறு செய்திருக்கிறார். கூடவே ஒட்டு மொத்த திரைக்கதையிலும் எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாத படி செய்து ரசிக்க வைப்பத்தில் ஜெயித்து விடுகிறார்.அதிலும் ஆகாஷ் முரளி க்காகவே எழுதப்பட்ட கதை, திரைக்கதை ஆனாலும்,அதை பிரமாண்டமாக எடுத்திருப்பது பார்வையாளர்களை கவரவே செய்கிறது.

மொத்தத்தில் நேசிக்கிறேன் -சினிமா ஆர்வலர்களுக்கானது!

மார்க் 3/5

Tags :
Advertisement