For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே- விமர்சனம்!

09:48 PM Mar 08, 2024 IST | admin
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே  விமர்சனம்
Advertisement

முதலில் இந்த திரைப்படத்தை பிரஸ் ஷோ-வில் பார்த்த ஒரு ஜீவன் சொன்ன கமெண்ட்-டை கொஞ்சம் படித்து விடுங்கள். சில படங்களை இயக்கிய இயக்குநர்களைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்கத் தோன்றும். சிலரைப் பார்த்தவுடன் அடிக்கத்தான் தோன்றும். அப்படியொரு இயக்குநர் இயக்கியிருக்கும் படம்தான் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..! முன்னொரு காலத்தில் விடலைப் பசங்களின் செக்ஸ் ஆசைகளைத் தூண்டும்விதத்தில் படமாக எடுத்து அவர்களின் குட்புக்கில் இடம் பிடித்த செக்ஸ் டாக்டர் செல்வராகவனின் படம் போலவேதான் இதுவும் வந்திருக்கிறது. 2 நிமிடங்களுக்கு சுய இன்பம் செய்யும் காட்சியை அப்பட்டமாக படமாக்கி வைத்திருக்கிறார். முன்பின் தெரியாத ஒரு பெண்ணைப் பார்க்கப் போகும்போதே காண்டம் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு போகிறார் ஹீரோ. படம் முழுவதும் பெண்களைத் தள்ளிட்டுப் போறது பற்றியே பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர். கடைசியாக அதற்கு மறுதலிக்கும் பெண் அந்த இளைஞனுக்கு கிளாஸ் எடுப்பதுபோல் எடுத்து பெண்கள் தரப்பு நியாயத்தை பதிவு செய்திருக்கிறாராம். கடைசிவரையிலும் கிஞ்சித்தும் இதெல்லாம் தவறு என்பதை அந்த இளைஞனின் மரமண்டையிலும் ஏறவில்லை. இவன் அடங்கியவுடன், அடுத்தவன் இதே தொழிலை ஆரம்பிக்கிறானாம்..!ஆக மொத்தத்தில் இந்த இயக்குநர் சொல்லும் கருத்து, நாடு இப்படித்தான் இருக்கும். நாம கண்டுக்கக் கூடாது என்பதுதான். வெளங்கிரும்டா நாடு..இப்பத்தான் பாண்டிச்சேரில ஆர்த்தி என்ற சின்னப் பொண்ணை நாசம் பண்ணிருக்கானுங்க.. இது மாதிரி இன்னும் 2 படம் வந்தா போதும்.. இது மென்மேலும் தொடரத்தான் செய்யும்..!படம் எடுக்குறானுகளாம் படம்..!

Advertisement

அதே சமயம் இன்னொரு மீடியாமேன் சொல்லி இருந்த கமெண்ட் இது : 90s கிட்ஸ் 80ஸ் கிட்ஸ் அப்பாலே போகவும்.. 2k1 கிட்ஸ் தொடரவும்...நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.. டைட்டில் பார்த்த உடனே சரி ஏதோ கருத்து சொல்லி சாவடிக்க போறாங்க போல இருக்குன்னு நினைத்து தான் உட்கார்ந்தேன்.. ஆனால் ரசிக்கும் படி படம் இருந்தது.. கதை இன்னும் ஒன்னும் பெருசா மெனக்கடவில்லை.. ஒரு பையன் ஆன்லைன்ல ஒரு பொண்ணோட கடலை போடுறான்.. மதுரையில் இருக்கிற பையன் மாயவரத்தில் இருக்கும் பெண்ணை சந்திக்க போகிறான்.. அன்று ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் படம்..!பிடிச்ச விஷயம் shot கம்போசிஷன்.. length shot அதில் Chinna Chinna drama.. அந்த லென்த் ஷார்ட் ஷார்ப்பா கட் பண்ணி போடாம 4 செகண்ட் 5 செகண்ட் end tail விட்டு cut செய்த விதம் அருமை.. Beautiful camera work. ஆட்டோகாரர்ட் வழி கேப்பாங்க. கேமரா ஆட்டோ உள்ள இருக்கும்.. அப்படியே ரோடு வெளியே போய் கட் ஆகும். இன்னொரு இடத்தில் நாலு பசங்க வண்டில துரத்திகிட்டு வருவாங்க போலீஸ் அவங்களை நிறுத்தும் ஒரு பாலம் இருக்கும் கேமரா பாலத்தை கடந்து போய் நிக்கும் தூரத்தில் பசங்க வண்டி நின்னுடும். அந்த shot ரொம்ப நல்லா இருந்தது..!புது முகமா இருந்தாலும் எந்த இடத்திலும் தயக்கம் இல்லாம நடிச்சிருக்காங்க. அடல்ட் காமெடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது..படம் போர் அடிக்கல.. ஒரு தடவ பாக்கலாம்.. பெரிய மைனஸ் படத்தோட பெயர்.. நல்ல பேரு வாங்க வேண்டும் பிள்ளைகளேன்னு வைத்ததற்கு பதில்.. ஒரு நாள் காதல், நீ லைன்ல தான் இருக்கியா.., சாப்டியா, ஆன்லைன் காதல்.. டேட்டிங் போலாம் வர்றியா.. அப்படின்னு யூத்த கவர மாதிரி டைட்டில் வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்தது இருக்கும்..!

Advertisement

இந்த இரண்டையும் தாண்டி நம் டீம் ஜர்னலிஸ்ட் சொன்ன கமெண்ட்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே .. இந்த வாரம் திரையரங்குகளில் வருது. இன்னக்கி பார்த்த Sweet Surprise இந்தப்படம் தான் ! எல்லாமே புதுமுகம் ஆனா அது கொஞ்சம் கூட தெரியாம சினிமா லவ் பண்ணி எடுத்திருக்காங்க! முக்கியமா கேமரா நிறைய லெந்த் ஷாட் அது கட்டாகுற இடம் அதுக்கு கொடுக்குற ப்ரீத். எல்லாம் சூப்பர். அப்புறம் டயலாக் யாருமே எழுதி பேசி நடிச்ச மாதிரி தெரியல அத்தனை லைவ்வா இருந்தது கதை ஒண்ணுமே இல்ல ஒருத்தன் ஒரு பொண்ண கரக்ட் பண்ணி டேட்டிங் கூட்டிப்போறான் அப்ப என்ன நடக்குது அதான் படமே ..! இன்னைக்கு இளைஞர்கள் மனநிலைய கேமரா பிடிச்சு காட்டிருக்காங்க ..!படத்துக்கு நல்ல யூத்புல்லா ஒரு டைட்டில் வச்சிருக்கலாம்.அப்புறம் டிஐ பண்ணிருக்கலாம் .இப்ப லைவ் ஃபீல் தந்தாலும் சினிமா உணர்வ தரவில்லை. இருந்தாலும் நல்ல படம்னு சொல்ல வச்சிட்டாங்க..❤️

மேலே உள்ள வெரைட்டியான விமர்சன வரிகளின் சாராம்சம் - சென்சாரே அடல்ஸ் ஒன்லி சர்டிபிகேட் கொடுத்த நிலையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழந்து விட்ட படமிது

மார்க்- 2.25/5

Tags :
Advertisement