தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மெரி கிறிஸ்துமஸ் - விமர்சனம்!

09:17 AM Jan 12, 2024 IST | admin
Advertisement

பாலிவுட் டைரக்டர் ஸ்ரீராம் ராகவன் புனேவில் உள்ள பிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (FTII) இல் பட்டம் பெற்ற 17 வருஷங்களுக்குப் பிறகு தனது முதல் படத்தை வழங்கினார், அதன் பிறகு கடந்த 14 வருடங்களில் ஐந்து படங்களை மட்டுமே கொடுத்து இருக்கிறார். .இப்போது மெரி கிறிஸ்துமஸ்..அதிலும் கடந்த 2018 இல் இஅவர் டைர்க்ஷனில் வெளிவந்த அந்தாதுன் திரைப்படம் விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதன் பிறகு அவர் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் இயக்கியிருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் பிரெஞ்சு நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்படி டைரக்டருடன் பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கிய திரைக்கதை சகலரையும் கவர்ந்ததா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. அதே சமயம் எடுத்துக் கொண்ட கதையை கொஞ்சம் புதுப் பாணியில் கோர்த்து மேல் தட்டு வர்க்கம் மட்டுமே ரசிக்கும் படி வந்திருக்கிறது இந்த மெரி கிறிஸ்துமஸ்.!

Advertisement

நாயகன் ஆல்பர்ட் என்ற பேர்கொண்ட விஜய்சேதுபதி கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் துபாயில் இருந்து மும்பைக்கு வந்த இடத்தில் ஹோட்டல் ஒன்றில் தனது வாய் பேசாத மகளுடன் இருக்கும் நாயகி மரியா என்ற பேர் கொண்ட கத்ரீனா கைஃப்பைச் சந்திக்கிறார். கணவருடனான பிரச்சினையில் இருந்து தப்பிக்க துணை தேடும் நாயகி விஜய் சேதுபதியுடன் கொஞ்ச நேரமாவது செலவிட ஆசைப்படுகிறார். இதை அடுத்து மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியே மகிழ்ச்சியாக இருவரும் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் வீட்டில் நாயகியின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். உடனே போலீசுக்கு போன் செய்யலாம் என அவர் சொல்லும்போது விஜய்சேதுபதி அங்கிருந்து தான் உடனே செல்ல வேண்டும் என்று சொல்லி தப்ப நினைக்கிறார். ஏன்? யார் விஜய்சேதுபதி, நாயகியின் கணவர் கொலை ஏன்? என்பதை கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாமல் சொல்லி இருப்பதுதான் மெரி கிறிஸ்துமஸ் கதை.

Advertisement

நாயகன் ஆல்பர்ட் ரோலுக்கு தேவையான நடிப்பை வழக்கம் போல் வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. பல வசன உச்சரிப்புகளில் 'சலிப்பூட்டும் விஜய் சேதுபதியாகவே' அவர் தோன்றினாலும், அவை காமெடி காட்சிகள் என்று நினைவூட்டி சிரிக்க வைத்துத் தப்பித்து விடுகிறார்.ஹீரோயின் ரோலில் வரும் கத்ரீனா கைஃப் துணிச்சல் மிக்க மற்றும் எல்லா சம்பவங்களையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பயணிக்கும் டத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, அந்த ரோலின் கனத்தைப் புரிந்து மிக சரியாகவும் கையாண்டிருக்கிறார். கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு வேலை குறைவு என்றாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

மது நீலகண்டனின் கேமராக் காட்சிகள் அனைத்தும் ஓவியம் போல் இருக்கிறது. கதை இரவு நேரத்தில் பயணிப்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், சிவப்பு வண்ணங்களாலும், விளக்கு ஒளியாலும் காட்சிகளை அலங்கரித்து அழகு சேர்த்திருக்கிறார். ப்ரீத்தம் இசையில், யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் மெலோடியாக இருந்தாலும் சுமார் ரகம் தான். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

இரண்டரை மணி நேரத்துக்கும் கொஞ்சம் குறைவாகவே ஓடக்கூடிய இப்படத்தை மிகச் சிலக் கேரக்டர்களே தாங்கி பிடித்தபடி அழைத்துச் செல்கிறார்கள். குறிப்பாக ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஆல்பர்ட் ஆக விஜய் சேதுபதியும், மரியாவாக வரும் கத்ரீனா கைஃப் இருவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். முதலாளி மனைவியுடனான தொடர்பில் இருந்து கொலையாளி ஆன விஜய் சேதுபதியும், தன் சதா இம்சிக்கும் கணவரை பழிவாங்க வேறு நபருடன் டேட்டிங் செல்ல நினைக்கும் கத்ரீனா இருவரையும் காட்சிப்படுத்தி இருப்பதெல்லாம் ஓ கே-தான்..

ஆனால் அடுத்தடுத்து யூகிக்கவைக்க காட்சி அமைப்பு,, விஜய் சேதுபதி யாருடன் தொலைபேசியில் பேசினார், கத்ரீனா எப்படி தன் திட்டத்தை இவ்வளவு நம்பினார், ஒரே இரவில் மொத்த தடயங்களையும் அழிக்கப் போடும் திட்டம், மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள், குறிப்பாக குற்றம் நடந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கிறதா என்று ஆராயாமல் பழைய விசாரணையை கையிலெடுக்கும் போலீசார் என்பது போன்ற ஏகப்பட்ட லாஜிக் இடையூறுகள் இருக்கிறது. கூடவே ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வே வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

மொத்தத்தில் இந்த, மெரி கிறிஸ்துமஸ் ஏமாற்றமே!

மார்க் 2.25/5

Tags :
Katrina Kaifmovie . reviewVijay Sethupathiகத்ரீனா கைஃப்திரை விமர்சனம்மெரி கிறிஸ்துமஸ்விஜய் சேதுபதி
Advertisement
Next Article