For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மழையில் நனைகிறேன் - பட விமர்சனம்!

10:32 PM Dec 27, 2024 IST | admin
மழையில் நனைகிறேன்   பட விமர்சனம்
Advertisement

ர்வதேச அளவில் பொதுமொழி காதல் என்று சொன்னால் அது மிகையல்ல. நம் ஊரின் பெரும்பான்மை மக்களால் விரும்பிப் பார்த்து ரசிக்கப்படும் கலை வடிவமான, சினிமா ஊடகத்தின் வழியே காட்சிப்படுத்தப்படும்போது, காலத்தால் அழியாப் படைப்புகளாக அவை விஞ்சி நிற்கின்றன. 90க்கும் அதிகமான ஆண்டு கால நம் தமிழ் சினிமா வரலாற்றில், இவ்வாறு காலத்தால் அழியாக் காதல் திரைப்படங்கள் எத்தனையோ வந்து போயுள்ளன. மேலும் தயாராகி ரிலீஸ் ஆக முடியாத காதல் கதைச் சினிமாக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கும். இச்சூழலில் மேற்படி பட்டியலின் எண்ணிக்கையைக் கூட்ட வந்துள்ள படமே ' மழையில் நனைகிறேன்'. சோகம் என்னவெனில் பல படங்களில் பார்த்த அதே காதல் காட்சிகளுடன் உருவாகி இருப்பதுதான்,

Advertisement

கதை என்னவெனில் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த , டிகிரி கூட முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர் பின்னாடியே மாதக்கணக்கில் அலைகிறார். ஒரு வழியாக அவரிடம் தன் காதலை சொல்ல, ரெபா அதை மறுத்துவிடுகிறார். மனமுடைகிறார் அன்சன். தன் காதலை ஏற்கும் வரை காத்திருப்பேன் என்று கூறி சென்று விடுகிறார். ரெபாவின் வழியில் செல்லாமல் தனித்தே இருக்கிறார் அன்சன்.நாட்கள் கடந்து செல்ல, அன்சனின் ஒரு சில குணாதிசயங்கள் ரெபாவிற்கு பிடித்துப் போக, அவர் மீது ரெபா காதல் வயப்பட்டு விடுகிறார். ஒரு தலை காதலானது இருதலை காதலாக மாறுகிறது.தனது காதலை அன்சனிடம் சொல்வதற்கு தயாராகிறார் ரெபா. இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருக்கும் போது பெரும் விபத்திற்குள் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். இருவருமே பலத்த காயமடைகின்றனர்.அதன்பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே மழையில் நனைகிறேன்,

Advertisement

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து வந்த அன்சல் பால், ஹீரோவாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பணக்கார வீட்டு பையனாக ஜாலியான வாழ்க்கையாகட்டும், காதலுக்காக ஏற்றுக்கொள்ளும் கஷ்ட்டமான வாழ்க்கையாகட்டும் இரண்டிலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், அழகு மற்றும் நடிப்பு என இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, அன்சனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார் எல்லோருமே பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்

விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை. கேமராமேன் ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது.விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோரது வசனங்கள் காதல் காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருந்தாலும், “நீ நினச்சா பல கார்களை வாங்கலாம், ஆனால் ஐயங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட..” என்ற வசனத்தின் மூலம் கைதட்டல் பெறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் காதலுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஏகப்பட்ட படங்களில் பார்த்து 'சே' என்று சொல்லுபடி இருக்கின்றன. அதே சமயம் இதெல்லாம் க்ளைமாக்சில் வந்து மாறி ரசிகர்களை ப்சக் என்று கவர்ந்து விடும் என்று டைரக்டர் கணக்குப் போட்டு ஒரு டர்னிங் பாயிண்டு கொடுத்து இருக்கிறார். ஆனால் அதுவும் கூட எக்கச்சக்க படங்களில் பார்த்தது தான் என்பதுதான் நிஜம்.

முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வசனமோ, காட்சிகள் இல்லாத கூடவே சண்டைக் காட்சி எதுவும் இல்லாத நல்லதொரு காதல் படமாக இருந்தாலும் லவ் பண்ண முடியாத படைப்பாக வழங்கி அப்செட் ஆக்கி விட்டார்கள்

மொத்தத்தில் மழையில் நனைகிறேன் - சளி பிடித்த படமிது

மார்க் 1.75/5

Tags :
Advertisement