தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மேடீஸ் விருது!

09:40 PM Jul 04, 2024 IST | admin
Advertisement

ன்றைய உலகில் விளம்பரம் இல்லாத எந்தச்செயலுமே இல்லை என்னும் நிலை உருவாகியுள்ளது. அங்கீகாரத்துக்கும், தத்தம் வலிமையைப் பறைசாற்றுவதற்குமான போட்டிகள் நாளுக்குநாள் எல்லாத் துறைகளிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும், எல்லா வயது வரம்பினரிடையேயும் பயில்வதைக் காண்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை, விளம்பரங்களால் ஆட்டிவைக்கப்படும் எந்திரமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.ல் அச்சு, வெறும் மதப்பிரசார எந்திரமாகவே பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவே, துண்டுப்பிரசுரங்களில், மதங்குறித்த குறிப்புகளைப் பரப்ப உதவியது. இக்காலத்திலேயே, மதத்திலிருந்து சற்றே விலகி, வணிகத்துக்கும் இத்துண்டுப் பிரசுர யுக்தி கையாளப்பட்டது. நாளடைவில் இது மிகப்பெரிய வெற்றியையும் தந்தது.

Advertisement

18-ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரங்கள் வெகுவாரியாகப் பரவத் தொடங்கின. பெரும்பாலும் இவை ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்த ஏனைய நாடுகளில் மதப்பிரசாரம் செய்ய உதவும் கருவிகளாக உலகெங்கும் புற்றீசல் போலப் பரவின. நாளடைவில், அச்சு எந்திரங்கள் மதம் விடுத்த மற்ற துறைகள் குறித்த கருத்துகளைத் தாங்கி வர ஆரம்பித்த காலத்தில் செய்தித்தாளின் வடிவம் தோன்றலாயிற்று. இக்கண்டுபிடிப்பே விளம்பரத்தை உச்சாணிக்கிளையில் ஏற்றி வைத்தது எனலாம். அதே சமயம் கற்றவர் மட்டும் செய்திகளை அறிந்துகொள்ளும் ஒரு எல்லையிலேயே இவ்வூடகம் செயல்பட்டது. இதை உடைத்து வந்ததுதான் வானொலி. வானொலியின் தாக்கம், விளம்பரங்களைப் பட்டிதொட்டிகளிலெல்லாம் பரவச் செய்தது.பின்னாளில் உலகை விழுங்கத்தொடங்கிய சின்னத்திரை எனப்படும் டிவி தொடங்கி திரையுலகமும், இணையவலைகளும், இந்நாளில் உலகை ஆட்டிபடைக்கும் தொலைபேசி வழி இணையமும், விளம்பரத்தைத் தொடமுடியாத எல்லைகளையெல்லாம் தொடவைத்தன. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுவதே விளம்பரத்துறை.

Advertisement

அதையொட்டி Madras Advertising Club-ன் Maddy's விருதுகள் 2024 விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விளம்பரத் துறையின் மிகச்சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் இவ்விழாவில் விளம்பர மற்றும் தொழில் நிறுவனங்ளைச் சார்ந்தவர்களும் ஊடகத்துறையினரும் கலந்துகொண்டனர். இதில் சிறந்த விளம்பர மற்றும் படைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கான மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் விருதுகள் வழங்கப்பட்டன. மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் சென்னையில் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 50 ஆண்டு களைத் தாண்டி இயங்கி வரும் இந்நிறுவனம், சிறந்த விளம்பரம் மற்றும் படைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 98 பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதில் Media & Entertainment, Promos - Non Fiction பிரிவில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வெண்கல விருது கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 1 கோடி Subscriber-களைப் பெற்ற தமிழ் செய்தி யூட்யூப் சேனல் எனும் பெருமையை புதிய தலைமுறை கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்றது. இதற்காக வெளியிடப்பட்டிருந்த Promo Video-விற்காக, புதிய தலைமுறையின் மார்க்கெட்டிங் பிரிவுக்கு Advertising Club-ன் விருது கிடைத்துள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது

Tags :
Maddy's Awards 2024Madras Advertising ClubMedia & EntertainmentNon FictionPromosPUTHIYA THALAIMURAI
Advertisement
Next Article