For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முதலில் ஜெயிக்கறோம்:அப்புறமே பிரதமர் தேர்வு- இந்தியா கூட்டணி முடிவு!

10:25 PM Dec 19, 2023 IST | admin
முதலில் ஜெயிக்கறோம் அப்புறமே பிரதமர் தேர்வு  இந்தியா கூட்டணி முடிவு
Advertisement

டுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற சூளுரையுடன் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மேலும் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அமைத்து அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதேநேரம் பா.ஜ.க-வும், இந்தியா கூட்டணி பெயரைக் கண்டு அச்சத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என பா.ஜ.கவினர் பயன்படுத்தி வருகின்றனர். பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் இந்தியா கூட்டணி வலுவடையாது சிதைந்து விடும் என பா.ஜ.கவினர் சொல்லி வந்தனர். ஆனால் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட் 'இந்தியாவை மீட்பதே ஒரே நோக்கம்' என்ற கோரிக்கையுடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதால் பா.ஜ.கவினர் கொஞ்சம் பீதியில்தான் உள்ளனர்.

Advertisement

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்து பெங்களூரிலும், இதற்கு அடுத்து மும்பையிலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர். இதையடுத்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, வைகோ, டி.ஆர்.பாலு, லாலு பிரசாத், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

அப்போது இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் எம்.பி-க்கள் சஸ்பெண்ட் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வரும் 22-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றம் நடக்கும்போது நாடாளுமன்றத்திற்கு வராமல் பல மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சியின் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் ஆட்சியமைக்க போதுமான எம்.பி-க்கள் இருப்பார்கள். அதன்பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tags :
Advertisement