For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாட்ஸ் அப் செய்திகளை CIA கண்காணிக்க முடியும் - மார்க் ஸூக்கர்பர்க்!

08:47 PM Jan 15, 2025 IST | admin
வாட்ஸ் அப் செய்திகளை cia கண்காணிக்க முடியும்   மார்க் ஸூக்கர்பர்க்
Advertisement

லகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். நட்பு, பொருளாதாரம், வணிகம், வேடிக்கை, குடும்பம், பகிர்தல் என்று பயனர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னணி வகிக்கிறது வாட்ஸ் அப். இந்தியாவில் மற்ற சமூக வலைதளங்களைவிட வாட்ஸ் அப்பின் பயன்பாடும் பரிமாணமும் அதிகம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 390 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் பிற சோசியல் மீடியாக்களை விட வாட்ஸ் அப் மிகவும் பாதுகாப்பான செய்தி பரிமாறும் தளமாக உள்ளது என்பதுதான். ஆம் வாட்ஸ் அப்பில் என்கிரிப்டட் வடிவில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன, அதை அனுப்பியவரும் பெற்றவருமே மட்டுமே பார்க்க முடியும்; வாட்ஸ் அப் நிறுவனமேகூட பார்க்க முடியாது என்று சொன்னதுதான். இந்நிலையில்,மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட் எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நெறியாளர் பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கேட்டறிந்தார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் செய்திகள் பற்றியும் கேட்டறிந்தார்.

Advertisement

அதற்கு பதில் அளித்த மார்க், வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA கண்காணிக்க முடியும் முடியும் என்ற தகவலை கூறினார். பயனர்கள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பும் போது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் போன்ற தகவல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும் செய்திகளை CIA பார்க்க முடியும் என மார்க் கூறினார்.

Advertisement

மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பது அமைப்பானது பயனர் அனுப்பும் செய்திகளை நிறுவனம் மற்றும் மற்ற யாரும் பார்க்க முடியாதபடி மட்டுமே இருக்கும் . ஆனால் அது அமெரிக்கா CIA-இன் கண்காணிப்பில் இருந்து பாதுகாக்காக்காது என மார்க் ஸூக்கர்பர்க் கூறினார்.தற்போதுள்ளபடி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை தானாகவே அழிக்கும் வண்ணம் உள்ள அமைப்பை பயன்படுத்தி தாங்கள் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை பாதுகாக்கலாம் என்றும் மார்க் கூறினார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு வாட்ஸ்அப் தரவுகளை நேரடியாக அணுக பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் கருவிகளை பயன்படுத்துகின்றன என்றும் ஸூக்கர்பெர்க் நேர்காணலில் கூறினார். இந்த கருவிகள் மூலம் மேற்குறிப்பட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்பட்ட செய்திகளை கூட படிக்கலாம், அழிக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கலாம் என்றும் அதன் வழி தொடர்புகளையும் கண்காணிக்கலாம் என மார்க் ஸூக்கர்பர்க் தெரிவித்தாராக்கும்.

Tags :
Advertisement