உறக்கம் போக ஓய்வு எடுப்பதும் அவசியம்!
ஒரு மனிதனுக்கு
எட்டு மணிநேரம் - உறக்கம்
எட்டு மணிநேரம் - உழைப்பு
எட்டு மணிநேரம் - ஓய்வு -தேவை என்று எழுதியிருந்தேன். எட்டு மணிநேரம் உறக்கம் தேவை!அது புரிகிறது. அது என்ன எட்டு மணிநேர ஓய்வு? உறக்கம் வேறு ? ஓய்வு வேறா? ஆம்... உறக்கம் என்பது ,நமது உடலுக்கானது.உறுப்புகளுக்கானது. நல்ல உறக்கம் இருந்தால் தான் நம்மால் ஆற்றலுடன் செயல்பட முடியும். நல்ல சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.இதெல்லாம் புரிகிறது ..இதுவே ஓய்வு தானே..?பிறகு எதற்கு தனியாக ஓய்வு என எட்டு மணிநேரங்கள்??? உறக்கம் என்றால் SLEEP .,ஓய்வு என்றால் LEISURE . உழைப்பு என்றால் HARD WORK. இதில் நாம் உழைக்கும் நேரம் நமக்கானதா? ஆமாம்.... இல்லை.ஆமாம் என்றால் அதன் மூலம் கிடைக்கும் . சம்பாத்தியம் - லாபம் நமக்கானது. அதை வைத்து நாம் நமது வறுமையை விரட்டி தனவந்தர்களாகவும் மாறுகிறோம். இல்லை என்றால் பணத்தை வைத்து மாடமாளிகை கட்டி உள்ளே ஏசி போட்டு ,பஞ்சணையில் படுத்தாலும் உறக்கம் வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
காரணம் பொருளாதாரம் பெருகி வருகிறது. அதே நேரம் நம்மிடையே மன நிம்மதி குறைந்து வருகிறது. மன உளைச்சலும் பதட்டமும் பெருகி வருகிறது. பணம்/ பொருள் இவை சார்பு தத்துவத்துக்குள் வருகின்றன.நம்மிடம் இருக்கும் விசயம் ,நமக்குத் தர வேண்டிய மகிழ்ச்சியை விட பிறரிடம் இருக்கும் பொருள் நம்மிடம் இல்லையே என்ற உளைச்சல் மேலோங்கி நிற்கிறது.ஒரு பொருளை நாம் ஆசைப்படும் போது இருக்கும் விருப்பம் அதை அடையும் போது இருப்பதில்லை. ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் போது காட்டாத அக்கறை அது தொலைந்த பிறகு காட்டப்படுகிறது. இவ்வாறு என்னதான் பணத்தைக் கொண்டு அனைத்தையும் வாங்கினாலும் நம்மால் திருப்தி - மன அமைதியை வாங்க முடியவில்லை. இது உண்மை. இதற்குத் தான் LEISURE எனும் ஓய்வு எட்டு மணிநேரம் தேவை.
இந்த ஓய்வு நேரத்தை மூன்றாக வகுத்துக் கொண்டு
- நமக்கே நமக்கானது
- சமூகத்துக்கானது
- குடும்பத்துக்கானது என்று பிரித்துக் கொள்வதில் என்ன பிரச்சனை?நமக்கே நமக்கான ஓய்வு நேரத்தில்
- நமது மனதுக்கு விருப்பமான விஷயங்கள் :ஓவியம் வரைதல் , இசை கேட்டல், இசை வாசித்தல், பாடுதல் அல்லது சிலருக்கு ட்ரைவ் செல்லுதல். - வாக்கிங் / ஜாக்கிங் / நீச்சல் / ஏதேனும் பிடித்த விளையாட்டு விளையாடுதல்
- குளித்தல்/ பல் துலக்குதல்/ முடி திருத்தம் செய்தல் / ஷேவிங் / இன்னும் நம் உடலை கவனித்துக் கொள்ளுதல் .,இதெல்லாம் தேவை தானே... !
அடுத்து ஓய்வு எட்டு மணிநேரத்தின் இரண்டாவது பகுதியை குடும்பத்துக்கு செலவழிக்க வேண்டும்
- பெற்றோர், மனைவி , மக்களுடன் தரமான நேரத்தை செலவழித்தல்
- மனம் விட்டுப் பேசுதல்
- குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல்/ கதை சொல்லல் / அவர்களைப் பேச விட்டுக் கேட்டல் ( இதற்கெல்லாம் எங்கே இப்போது நேரம் இருக்கிறது? ஆனால் இதுவும் முக்கியம் தானே?)
மூன்றாவது பகுதி -சமூகத்துக்கானது
- நமது நண்பர்கள் , சுற்றத்தார்
- சமூகத்திற்கு நமது பங்களிப்பை செலுத்தும் ஏதோ ஒரு காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வர வேண்டும்.
- சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சிந்திக்க வேண்டும்
மனிதன் பிற விலங்குகளிடம் இருந்து பிரித்தரியப்படுவது அவனது சிந்தனைத் திறனால் என்பதால் அவன் தொடர்ந்து சிந்திக்க வேண்டியது அவன் மீது விதிக்கப்பட்ட கடமையாகிறது. அவன் தொடர்ந்து,அவனுக்காகவும் ,அவனது குடும்பத்தாருக்காகவும்,சுற்றத்துக்காகவும் சமூகத்துக்காகவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.அதற்குரிய நேரமும் இந்த ஓய்வு நேரத்தில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே ,நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எப்படி உழைப்பது மிக மிக முக்கியமோ
அதே போல உறக்கம் மிக மிக முக்கியம். கூடவே ,ஓய்வு என்பது மிக மிக மிக முக்கியம்.நண்பர்களே,ஓய்வு என்பது நம்மில் பலருக்கு இன்னும் எட்டாத தூரத்தில் இருப்பினும் நாம் அனைவருமே ஓய்வு நேரங்களுக்கு தகுதியானவர்களே...! ஓய்வு எடுப்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல..!நன்றி