தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட முன்வடிவுகள்-முதல்வர் அறிமுகம்!

08:03 PM Jan 10, 2025 IST | admin
Advertisement

ண்மையில் அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. அதே சமயம் இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில் தமிழக சட்டச்சபையில் அதிமுக கருப்பு சட்டை அணிந்தும், யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இச்சூழலில் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2025ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். சட்டத்திருத்தத்தின்படி பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு பிணை கிடையாது.

Advertisement

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், "சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு, திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன் மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது.

Advertisement

பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.

இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS மற்றும் BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Tags :
1998amendcmHarassmentMK StalinprohibitionTamil NaduTamil Nadu Prohibition Of Harassment Of Women Actwomeny introduced a bill
Advertisement
Next Article