For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குடும்பஸ்தன் - விமர்சனம்!

08:55 PM Jan 24, 2025 IST | admin
குடும்பஸ்தன்   விமர்சனம்
Advertisement

வேறொரு ஜாதியைச் சேர்ந்த நாயகி சாந்தி மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் நாயகன் மணிகண்டன். மிடில் கிளாஸ் ஃபேமிலையை சேர்ந்த மணிகண்டன் ஒரு தனியார் விளம்பர கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனின் அப்பாவாக ஆர் சுந்தரராஜனும் அம்மாவாக குடாசாநத் கணக்கம் இருக்கிறார்கள். மணிகண்டனின் அக்காவாக நிவேதிதா ராஜப்பனும் இவரது கணவராக குருசோம சுந்தரமும் வருகிறார்கள். குரு சோமசுந்தரம் பெரிய ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்து வருகிறார். நல்லதொரு சம்பாத்தியத்தில் சற்று வசதி படைத்தவராக இருக்கிறார்.சமுதாயம் வேறு என்பதால் ஹீரோயின் சாந்தி மேக்னாவிற்கு மணிகண்டனின் வீட்டில் மரியாதை கொடுப்பதில்லை.

Advertisement

இச்சூழலில் மாதம் பிறந்தால் சம்பளம் என்ற எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மணிகண்டனுக்கு கண்டம் ஆரம்பிக்கிறது.ஒரு சிறிய ஈகோ பிரச்சனையால் வேலையை இழந்து விடுகிறார். அடுத்தடுத்து வீட்டில் வரும் கமிட்மெண்டால் வெளியே வட்டிக்கு பணம் வாங்குகிறார் மணிகண்டன். கூடவேவேலை பறிபோனதை வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இருக்கிறார் மணிகண்டன்.ஒரு கட்டத்தில் மணிகண்டன் வேலை இல்லாமல் இருப்பது குரு சோமசுந்தரத்துக்கு தெரிந்து விட, சமயம் பார்த்து குடும்ப சொந்த பந்தங்கள் கூடியிருக்கும் விழாவில் அதனை கூறி மணிகண்டனை அசிங்கப்படுத்தி விடுகிறார்.அதன் பிறகு மணிகண்டனின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே குடும்பஸ்தன் படத்தின் கதை.

Advertisement

கமிட் ஆகும் ஒவ்வொரு பட கதாபாத்திரங்களை மிக எதார்த்தமாக கையாண்டு அதை மக்களிடம் சேர்ப்பதில் வல்லவராகிவிட்ட மணிகண்டன், கதையின் நாயகனாக நடித்து வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். காதல் திருமணம், அதை தொடர்ந்து குடும்பத்தில் எழும் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், அதை சமாளிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் ஏற்படும் தோல்விகள் என ஏகப்பட்ட இளைஞர்கள் கடந்திருக்கும் அல்லது கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை காட்சிகளாக வடிவமைத்து, அதை தனது உடல் மொழி மற்றும் இயல்பான நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களை கவர வைத்து கூடவே சிரிக்க வைத்து ரசிக்கவும் வைக்கும் மணிகண்டன் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுவதில் இப்படத்திலும் ஜெயித்து விடுகிறார்.

ஹீரோயினாக வரும் சான்வி மேக்னா, நியூ ஃபேஸ் என்ற அடையாளமே தெரியாமல் புகுந்து விளையாடியிருக்கிறார். வேறு சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் கணவரின் உறவினர்கள் ஏளனம் பேச, அதை மிக சாதாரணமாக கையாண்டு பதில் கொடுக்கும் காட்சிகள் முதல், பிரசவ வலியிலும் தனது மாமியார் மீது குற்றச்சாட்டு வைத்து தன் கோபத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

ஹீரோ மணிகண்டனுக்கு ஈக்வலாக நமுட்டு சிரிப்புடன் திரையில் தோன்றும் போதெல்லாம் அப்ளாஸ் வர் குரு சோமசுந்தரம் தான். குடும்பம், ஆபீஸ் என எல்லா இடங்களிலும் தனக்கென ஒரு ‘கோடு’ போட்டு வாழும் காமெடி கலந்து ஸ்ட்ரிட்க் ஆபீசர் ரோலில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், அம்மாவாக வரும் கனகம், நிவேதிதா ஆகியோர் பர்ஃபெக்ட். அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், மணிகண்டனின் முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் சகலரும் காமெடிக்கு உத்திரவாதம் கொடுப்பதில் தேறி விடுகிறார்கள்.!

கேமராமேன் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் கேமரா கதாபாத்திரங்களை இயல்புத்தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, அவர்களின் உடல் மொழியை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. மியூசிக் டைரக்டர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குடும்பஸ்தனின் தரத்தை உயர்த்தி விடுகிறது. குறிப்பாக பின்னணி இசையில் கூட நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளரின் மெனக்கெடல் தனி கவனம் ஈர்க்கிறது.

ஆனால் அனைவர் குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சம்பவங்கள், ஏகப்பட்ட படங்களில் பார்த்த காமெடி கான்சப்ட் என்பது மட்டுமின்றி இன்டர்வெல்லுக்கு பின்னர் நாயகனுக்கு பிரச்சினைகள் ஒரே மாதிரி திரும்ப திரும்ப வருவதும், மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்ட கடன்காரர்கள் தடாலடியாக சாதுவானவர்களாக மாறுவதெல்லாம் படத்திற்கு மைனஸாகி விட்டது.

ஆனாலும் டிவி சீரியல்களுக்கு இந்த குடும்பஸ்தன் ஒரு மாற்று மருந்து!

மார்க் 3/5

Tags :
Advertisement