For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புது யுகம் டி.யின் 'சினிமா 2.0' நிகழ்ச்சி ஆஹா..ஓஹோ..பேஷ்,பேஷ்!

06:27 PM Jan 29, 2025 IST | admin
புது யுகம் டி யின்  சினிமா 2 0  நிகழ்ச்சி ஆஹா  ஓஹோ  பேஷ் பேஷ்
Advertisement

முன்னொரு காலம் கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய ஹைடெக்குடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம்,மெத்து மெத்தென உள்ள சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய மட்டுமல்ல இன்றைய திரையரங்குகளும் உள்ளன என்பதும் நிதர்சனமான உண்மை.

Advertisement

1931-ல் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்த டி.பி.ராஜலட்சுமியை ‘சினிமா ராணி’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். சினிமா கலைஞர் ஒருவருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது என்றால், அது டி.பி.ராஜலட்சுமிக்குத்தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இன்று மலர்ந்த நடிகர், நடிகை வரையிலும் ஒரே இரவில் நாடெங்கும் தெருவுக்குத் தெரு ரசிகர் மன்றங்கள் உருவாக்கி விடும் போக்கு உண்டு.

Advertisement

அதே சமயம் விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரைச் செய்திகளுக்கு இப்போதும் மவுசு உண்டா? என்று கேட்டால் உங்கள் அபிமான புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி ஹிட் அடிப்பதே பதிலாகும்.

சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர்.

தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், கோலிவுட், சாண்டவுட் ஹாலிவுட்,மோலிவுட்,, பாலிவுட், டோலிவுட் என சகல வுட் தகவல்கள் என கலந்துக் கட்டி வழங்கும் சினிமா 2.0 நிகழ்ச்சியை பார்ப்போர் பரவசமாகி விடுவதென்னவோ நிஜம்.இந்த சினிமா 2.0 ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

Tags :
Advertisement