For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஜீ.வி.பிரகாஷின் 'கிங்ஸ்டன் 'மார்ச் 7ல் ரிலீஸ்!

09:44 PM Jan 09, 2025 IST | admin
ஜீ வி பிரகாஷின்  கிங்ஸ்டன்  மார்ச் 7ல்  ரிலீஸ்
Advertisement

சையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், காட்சிகளை மேம்படுத்தும் அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த டீசரில் VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து.. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 'கிங்ஸ்டன்' பார்வையாளர்களுக்கு பரவசமிக்க உணர்வை வழங்கும் என்பதையும் உறுதியளிக்கிறது.

'கிங்ஸ்டன்' படத்தின் இந்தி பதிப்பு டீசரை முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகையுமான கங்கணா ரணாவத் வெளியிட்டார். தெலுங்கு பதிப்பு டீசரை முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா வெளியிட்டார்.

'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசரில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

Tags :
Advertisement