தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் -பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

07:48 PM May 23, 2024 IST | admin
Advertisement

தி கிரேட் பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.இந்நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisement

44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் ஆகும். கடந்த அக்டோபர் 2022 இல் நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமரானார்.. வரும் ஜூலையில் நடைபெற்ற பிரிட்டன் தேர்தல் என்பது, 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.தற்போது பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியிடம் தோல்வியடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இதனிடையே பிரிட்டனில் தொழிலாளர் கட்சியும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தேர்தலுக்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தது. பிரதமர் எப்போது தேர்தலை அழைத்தாலும் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது, நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

Advertisement

அது சரி இந்த தேர்தல் எதற்காக?

பிரிட்டனில் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து முடிவு செய்ய 650 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இந்தியாவைப் போன்றே நாடாளுமன்றத்தின் கீழவைக்கான உறுப்பினர்களாக இந்த 650 பேர் தேர்வு செய்யப்படுவர். நாட்டை நடத்திச் செல்வதற்கான சட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உருவாக்கும்.

வாக்கெடுப்பு எவ்வாறு செயல்படும்?

பிரிட்டன் பொதுத் தேர்தலில் மொத்தம் 46 மில்லியன் வாக்காளர்கள் 650 தொகுதிகளில் தங்களின் ஏதேனும் ஒரு தொகுதிக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பர். 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு பிரிட்டன் பிரஜையும், அல்லது பிரிட்டனில் நிரந்தர விலாசம் பெற்ற காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த பிரஜையும் வாக்களிக்கலாம். பொதுவாக வயதானவர்களே இளைஞர்களைக் காட்டிலும் அதிகமாக வாக்களிக்கின்றனர். 2017ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 20 -24 வயதுக்குட்பட்ட 59% பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் 60 -69 வயதுக்குட்பட்டோர் 77% சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர். தேவாலயங்கள், பள்ளிகள் போன்ற பல இடங்களில் வாக்கெடுப்பு நடைபெறும். வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர்களின் பெயருக்கு நேராக `க்ராஸ்` குறியீட்டை இட்டு சீல் செய்யப்பட்ட வாக்குப்பெட்டியில் அதனைச் செலுத்துவர்.

யாரெல்லாம் போட்டியிட முடியும்?

தேர்தல் நடைபெறும் தேதியில் 18 வயதை பூர்த்தியடைந்த யாரும் தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் பிரிட்டன் பிரஜையாகவோ அல்லது பிரிட்டனில் நிரந்தர விலாசம் பெற்ற காமன்வெல்த் நாட்டை சேர்ந்த பிரஜையாகவோ இருக்க வேண்டும். வேட்பாளர்கள் 500 பவுண்டை (இந்திய மதிப்பில் 46,691ரூபாயை) வைப்புநிதியாக கட்ட வேண்டும். ஆனால் அந்த வேட்பாளர் குறைந்தது 5 சதவீத வாக்கைப் பெற வேண்டும் இல்லையேல் அவர்களுக்கு இந்த பணம் திரும்பக் கிடைக்காது.

Tags :
announcementBritishgeneral electionJuly 4Prime MinisterRishi Sunak
Advertisement
Next Article