For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2025: அதிகாரப்பூர்வ அட்டவணை & சி.எஸ்.கே என்று?யாருடன்? எங்கே?

08:30 PM Feb 16, 2025 IST | admin
ஐபிஎல் 2025  அதிகாரப்பூர்வ அட்டவணை   சி எஸ் கே என்று யாருடன்  எங்கே
Advertisement

விளையாட்டு பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.தொடரின் முதல்போட்டியானது மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சொந்த மைதானமான ஈடன் கார்டனில் சந்திக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

Advertisement

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் 3வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.

74 லீக் போட்டிகளின் அடிப்படையில் புல்லிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 1 தகுதி போட்டிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். மேலும் 3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் விளையாடும். குவாலிஃபைர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இவ்வாறாக போட்டி அட்டவணை வடிவமைக்கப்படும்.

குவாலிபியர் 1 போட்டி மே 20ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 21ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23ம் தேதியும், தொடரின் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் அட்டவணை

🏏மார்ச் 23 (ஞாயிறு) சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி நடக்கும் இடம்: சென்னை

🏏மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: சென்னை

🏏மார்ச் 30 (ஞாயிறு) சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்: கவுகாத்தி

🏏ஏப்ரல் 5 (சனிக்கிழமை) சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: சென்னையில்

🏏ஏப்ரல் 8 (செவ்வாய்க்கிழமை) சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: முல்லன்பூர்

🏏ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: சென்னை

🏏ஏப்ரல் 14 (திங்கள்) சிஎஸ்கே vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடம்: லக்னோ

🏏ஏப்ரல் 20 (ஞாயிறு) சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் (MI) இடம்: மும்பை

🏏ஏப்ரல் 25 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: சென்னை

🏏ஏப்ரல் 30 (புதன்கிழமை) சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) இடம்: சென்னை

🏏மே 3 (சனிக்கிழமை) சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: பெங்களூரு

🏏மே 7 (புதன்கிழமை) சிஎஸ்கே vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடம்: கொல்கத்தா

🏏மே 12 (திங்கள்கிழமை) சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடம்: சென்னை

🏏மே 18 (ஞாயிற்றுக்கிழமை) சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) இடம்: அகமதாபாத்.

Tags :
Advertisement