For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியன் ரயில்வே :12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 9144 வேலை வாய்ப்புகள்!

09:13 PM Mar 16, 2024 IST | admin
இந்தியன் ரயில்வே  12 ம் வகுப்பு  ஐ டி ஐ படித்தவர்களுக்கு 9144 வேலை வாய்ப்புகள்
Advertisement

ம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று. 170 ஆண்டுகள் பழமையானது என்கிற வரலாற்று பெருமையும் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் நலனுக்காக தொடங்கி மேம்படுத்திய ரயில்வே துறை இன்று மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்து பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் ஆரம்பித்து இன்று புல்லட் ரயில் வரை வளர்ந்து நிற்கும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பிரமாண்டமானது. சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என ரயில்வே துறையின் வருமானமும் அதிகமானது.

Advertisement

இப்பேர்பட்ட இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 9144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

Technician Grade - I (Signal)

காலியிடங்களின் எண்ணிக்கை :

1092

கல்வித் தகுதி :

B.Sc Physics/ Electronics/ Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். அல்லது இதே பிரிவுகளில் Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

ரூ. 29,200

Technician Grade - III

காலியிடங்களின் எண்ணிக்கை :

8,052

கல்வித் தகுதி :

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கிரேடு வாரியாக தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

08.04.2024

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Tags :
Advertisement