இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை வாய்ப்பு!
இந்திய தபால் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு 650 கிளைகளும், தபால் அலுவலக நெட்வொர்க் மூலம் 1.63 லட்சத்துக்கும் மேற்பட்ட அணுகல் மையங்களும் உள்ளன. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிசேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், விர்ச்சுவல் டெபிட் கார்டு, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள், பில் மற்றும் பயன்பாட்டு கட்டணங்கள் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு சேவைகள், ஐபிபிபி கணக்குகளுடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கு இணைப்பு, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துதல், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ், ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் முறை, ஆதாரில் மொபைல் எண் புதுப்பிப்பு மற்றும் 5 வயதுடைய எந்தவொரு குழந்தைக்கும் குழந்தை சேர்க்கை சேவைகள் போன்ற சேவைகளும் கொடுக்கின்றன.
இப்பேர்பட்ட இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபப்டுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்கள் இதோ:
பணியின் விவரங்கள்
உதவி மேலாளர் IT 54
மேலாளர் IT 3
முதுநிலை மேலாளர் IT 3
சைபர் பாதுகாப்பு நிபுணர் 7
மொத்தம் 68
வயது வரம்பு
01.12.2024 தேதியின்படி, உதவி மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
மேலாளர் பதவிக்கு 23 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
முதுநிலை மேலாளர் பதவிக்கு 26 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
சைபர் பாதுகாப்பு நிபுணர் அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள இப்பணியிடங்கள் துறை சார்ந்த பிரிவில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு 1 வருடம், மேலாளர் பதவிக்கு 3 வருடம் மற்றும் முதுநிலை மேலாளர் பதவிக்கு 6 வருடம் வரை பணி அனுபவம் தேவை.
சம்பள விவரம்
உதவி மேலாளர் பணிக்கு தோராயமாக மாதம் ரூ.1,40,398 வழங்கப்படும்.
மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.1,77,146 வழங்கப்படும்.
முதுநிலை மேலாளர் பதவிக்கு ரூ.2,25,937 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தேர்வாகும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.01.2025
நேர்காணல் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.