For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி -பிப்.,23ல் இந்தியா - பாக்., மோதல்!

09:38 PM Dec 24, 2024 IST | admin
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  பிப்  23ல் இந்தியா   பாக்   மோதல்
Advertisement

லரும் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஆம்..அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் பயணிக்கவில்லை. அதையடுத்து இந்த தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்., 23 அன்று துபாயில் நடைபெற உள்ளது.

Advertisement

பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வரும் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் மற்ற போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன

Advertisement

இதனிடையில் அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் சென்று போட்டியில் பங்கேற்க மறுத்தது. இதனையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்திட முடிவானது.

இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம்

பிப்., 20- இந்திய - வங்கதேசம்

பிப்., 23- இந்தியா - பாகிஸ்தான்

மார்ச் 2- இந்தியா - நியூசிலாந்து

மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டி

பிப்., 19- பாக்., - நியூசிலாந்து

பிப்.,21- ஆப்கன்- தென் ஆப்ரிக்கா

பிப்.22- ஆஸி., - இங்கிலாந்து

பிப்., 24- வங்கதேசம் - நியூசி.,

பிப்., 25- ஆஸி.,- தென் ஆப்ரிக்கா

பிப்., 25- ஆப்கன் - இங்கிலாந்து

பிப்.,27- பாக்.,- வங்கதேசம்

மார்ச் 01- தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ல் நடக்கும் அரையிறுதியில் விளையாடும். பைனல் மார்ச் 9ல் நடக்கும். இந்திய அணி அரையிறுதி, பைனலுக்கு முன்னேறினால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும்.

Tags :
Advertisement