For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் ஆப்பு!

09:22 PM Dec 24, 2024 IST | admin
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் ஆப்பு
Advertisement

ம் நாட்டில் இன்னும் பலர் இணைய சேவை இல்லாத மொபைல்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அட, அவர்களைக்கூட விட்டுவிடுங்கள் . நம்மில் பெரும்பாலானோர் டூயல் சிம் வைத்திருப்போம். அதில் முதல் சிம்மில் தான் கால் வசதி, இணைய வசதி எல்லாம் வைத்திருப்போம். மாதம் குறைந்தது 300 ரூபாய்க்கு ரீசார்ஜும் செய்துவ ருவோம். முதல் சிம் சிக்னலில் படுத்துவிட்டால் மட்டுமே அந்த இரண்டு சிம்மை பயன்படுத்துவோம். ஆனா, அந்த சிம்மிற்கும் இணைய வசதியுடன் கூட சந்தாக்களை மட்டுமே நம்மால் கட்ட முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதில் லாபம் பார்த்து வந்த சூழலில் தற்போது அதற்கு ஆப்பு வைத்திருக்கிறது தொலைத்தொடர்பு துறை.

Advertisement

மிக குறுகிய கால அவகாசத்தில் கால் வசதி, SMS வசதி. இந்த இரண்டை மட்டும் வைத்து புதுவிதமான மாதாந்திர பேக்குகளை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறது TRAI. இதில் இணைய வசதியை இணைக்கக்கூடாது என தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நகர்விற்கு இது முட்டுக்கட்டையாக இருக்கும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாக்கு சொல்லியிருக்கின்றன. ஆனாலும், தன் முடிவில் உறுதியாக இருக்கிறது டிராய். விரைவில், இணைய வசதி இல்லாத மாதாந்திர சந்தாக்களும் அறிமுகமாகவுள்ளன.அந்த வகையில் Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.!

Advertisement

தொலைத்தொடர்பு உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, தொலைத்தொடர்பு இந்திய ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விரைவில் 2G பயனர்கள் மற்றும் இரட்டை பயன்படுத்துவோருக்கான சிம் புதிய வழிகாட்டுதல்களை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. வழிகாட்டுதல் திட்டம்:

* TRAI அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், மற்றும் சேவைகளுக்கான பிளான்களை வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளது. வாய்ஸ் எஸ்எம்எஸ் தனிப்பட்ட வழங்கும்

* இதன் மூலம் இணைய சேவை இல்லாத 2G பயனர்களும், இரண்டாவது சிம் பயன்படுத்தும் பயனர்களும் குறைந்த செலவில் சேவையை பெற முடியும்.

2. தற்போதைய சிக்கல்கள்:

* பல பயனர்கள் ஒரே மொபைலில் இரட்டை சிம் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது, மற்றைய சிம் பயன்படுத்தப்படுகிறது. குறைவாகவே

* இதனால், இரண்டாவது சிம் மட்டுமே குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்டாலும், முழு தொகுப்பிற்கு (Combo Plan) பணம் செலுத்த வேண்டியுள்ளது.

3. 2G பயனர்களின் நிலைமை:

* இந்தியாவில், இன்னும் 2G 30 கோடி பேர் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதுள்ள ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்ததாகவும், குறைந்த வருவாய் கொண்ட 2G பயனர்களுக்கு சிரமமாகவும் உள்ளது.

4. மொபைல் எண்களின் உரிமை:

TRAI தெரிவித்துள்ளது, மொபைல் எண்கள் அரசாங்கத்தின் சொத்து என்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

* பயனர்கள் தேவையற்ற சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதற்காக TRAI இந்நடவடிக்கைகளை எடுக்கிறது.

5. TRAI-யின் எதிர்பார்ப்பு:

* அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

இது 2G பயனர்களுக்கு மட்டும் அல்லாமல், இரட்டை சிம் வைத்திருக்கும் பயனர்களுக்கும் செலவைக் குறைக்கும் தீர்வாக இருக்கும்.

மூலம்:

இந்த புதிய விதிகள், டெலிகாம் வாடிக்கையாளர்களின் பாதுகாக்க வாடிக்கையாளர்கள் நலன்களை மட்டுமல்லாமல், பயன்படுத்தும் சேவைகளின் திறனை மேம்படுத்தவும் உதவும். 2G சேவை நீங்கும் வரை, இது அந்நியோன்யமான மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, செலவைக் குறைத்து பயனர்களுக்கு தக்க சேவையை வழங்கும் முயற்சியாக TRAI- யின் முன்னோடியாக அமைந்துள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement