For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வெயிட்டான பாக்கெட் உணவு பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு - இன்று முதல் அமல்!

08:36 AM Jan 02, 2024 IST | admin
வெயிட்டான பாக்கெட் உணவு பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு   இன்று முதல் அமல்
Advertisement

காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகளைக் கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவைப்போர் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அந்தளவுக்கு டெக்னாலஜியில் முன்னேறி இருக்கிறோம். உடலில் நோய் என்று மருத்துவரிடம் சென்றால், `கீரை சாப்பிடுங்க’, `பழம் சாப்பிடுங்க’ என்றுதான் சொல்வாரே தவிர, ‘கடையில் விற்கும் நூடுல்ஸைச் சாப்பிடுங்க’ என்று சொல்ல மாட்டார். ஆரோக்கியம் வேண்டும், நோய் குணமாக வேண்டும் என்றால் நாம் நல்லுணவைத் தேடித்தான் செல்ல வேண்டும்.. ஒரு கொய்யாவோ, மாம்பழமோ வாங்குகிறோம். நான்கைந்து நாட்களிலேயே அதன் தோல் வறண்டுபோகும், கறுத்துப்போகும், அழுகியும் போகும். இதுதான் நமக்கான உணவே தவிர, வண்ண வண்ண பேக்குகளில் வரும் டப்பா உணவுகள் நோயை மட்டுமே தரக்கூடியவை. இந்த டெட்ராபேக் ஜூஸ்களை குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்; ஒற்றைத் தலைவலி, தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மேலும், இவை கெடாமல் இருக்க கெமிக்கல்களும் கலக்கப்படுகின்றன. ஓர் உணவு கெட்டுபோவதுதான் இயற்கை; கெடாமல் இருந்தால் அது நமக்கான உணவல்ல. இதை சுட்டிக்காட்ட வேண்டிய அரசு அதை செய்யாமல் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

Advertisement

ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு 'யூனிட் விற்பனை விலை' என்ன என்பதை அச்சிட வேண்டும். அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.

அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும்.
அதுவும் பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

Advertisement

இது குறித்து அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, ``இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இன்று முதல் இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.. பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான 'குறிப்பிட்ட அளவு' என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும் அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவுகளிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர்வோர் தங்களுக்கு தேவையா னதை தேர்வு செய்து வாங்கலாம்.~ என்று தெரிவித்தார்.

Advertisement