For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’கேம் சேஞ்சர்’- விமர்சனம்

01:42 PM Jan 11, 2025 IST | admin
’கேம் சேஞ்சர்’  விமர்சனம்
Advertisement

கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்ப திரைக்கதை படங்களை வழங்கி ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் டைரக்டர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கர், வழங்கியுள்ள படம் கேம் சேஞ்ச்சர்.'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு, ஷங்கரின் சிந்தனையும்,எழுத்தும், இயக்கமும் வீரியம் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இந்த 'கேம் சேஞ்சர்' மூலம், அரசியல் பின்னணியில் நிகழும் கதைகளை இணைத்து பக்கா கமர்ஷியல் படங்களை எடுப்பதில் தான் இப்போதும் ஒரு மாஸ்டர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டார். அதிலும் ராம் சரண் ஆக்டிங் இதில் மேலும் ஒரு படி உயர்ந்து அடடே சொல்ல வைத்துள்ளது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் கதைதான் அவரின் எடை அளவு கூட கனமில்லை என்பதுதான் சோகம்.

Advertisement

கதை என்னவென்றால் காலேஜில் படிக்கும்போது அப்பருவத்துக்குரிய வகையில் கியாரா அத்வானியை காதலிப்பதற்காக தனது கோபத்தை கைவிடும் ராம் (ராம்சரண்) காதலியின் விருப்பத்துக்காகவே ஐஏஎஸ் ஆகிறார். ஆனால் திடீரென்று கியாரா எங்க போனார்? என்று தெரியாமல் கல்யாணமே வேண்டாம் என்று வீட்டில் மறுப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார் . ஒரு சூழலில் கியாராவை சந்திக்க காதல் மறுபடியுன் வளர்கிறது. இதற்கிடையில் ராம் லைஃப்ஃபில் அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி எஸ் ஜே சூர்யா குறுக்கிடுகிறார். ஆனால் நேர்மையான கலெக்டரான ராம்சரண், பொலிடீசியம் எஸ் ஜே சூர்யாவின் சட்ட விரோத செயல்களை தடுக்கிறார். அதனால் பகை நீள்கிறது. ஒரு கட்டத்தில் பொது மேடையில் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட அது முற்றி போய் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கிறார்கள். இருவரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொள்கிறார்கள். இதையடுத்து இருவரது பதவியும் பறிக்கப்படுகிறது. இவர்கள் மறுபடியும் பதவிக்கு வருகிறார்களா? உண்மையிலேயே ராம்சரண் யார்? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக பதில் அளிப்பதுதான் கேம் சேஞ்சர் கதை.

Advertisement

மக்கள் பிரச்சனைக்காக போராடும் சமூகப் போராளி, அரசு என்றால் என்ன? என்பதை வெளிக்காட்டும் மாவட்ட கலெக்டர் என இரண்டு வேடங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர், சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார். அத்துடன் இதில் அப்பண்ணாபவாகத் திக்கித் திணறிப் பேசும் இடம், துரோகத்தால் வீழ்த்தப்படுகிற இடம் ஆகியவற்றில் ஸ்கோர் செய்கிறார்.

ஹீரோயினாக கியாரா அத்வானி, வழக்கமான ஷங்கர் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வந்து போகும் வாய்ப்புகளுக்கும், பிரமாண்ட பாடல் காட்சிகளிலும் மட்டும் உபயோகிக்கப்பட்டுள்ளார். மூத்த ராம்சரணுக்கு ஜோடி போட்டிருக்கும் அஞ்சலியின் கேரக்டர் படவோட்ட திருப்பங்களுக்கு உதவி இருக்கிறது. கூடவே அஞ்சலி வெளிப்படுத்திய நடிப்பைப் பார்த்து கைத்தட்டிய ரசிகர்கள் எக்கச்சக்கம்.முதல்வரின் மூத்த மகனாக அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் எல்லாம் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டார்கள்..

கேமராமேன் திரு தன் கைவண்ணத்தால் காட்சிகளை கலர் புல்லாகவும், பிரமாண்டமாகவும் ஷங்கரின் ஆசைப்படி படமாக்கியிருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் தமன்.எஸ்-ன் பாடல்களில் ஓல்ட் ஸாங்க்ஸின் சாயல் அதிகம் தெரிகிறது. பின்னணி இசையிலும் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் சாயல்தான் அடிக்கிறது. ஆக மொத்தம் குறிப்பிட்டு சொல்வதற்கு இசையில் புதிதாக ஒன்றும் இல்லை.

எடிட்டர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவரும் தயாரிப்பாளர் செலவு செய்தது திரையில் தெரிய வேண்டும் என்ற பேராவாவோடு பணியாற்றியிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

ஷங்கரின் வழக்கமான பாணியில் பிரமாண்ட கோஷ்டிகளுடன் பாடல்கள், கெக்கே பிக்கே காமெடி, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கும் வசனங்கள் என படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக பயணித்தாலும் இரண்டாம் பாதி அக்மார்க் தெலுங்குப் படமாகவே ஆகிவிட்டது. குறிப்பிட்டு சொல்வதானால் ஒரு டிஸ்ட்ரிக் கலெக்டர், அமைச்சரை எதிர்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிப்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். கேட்கவும் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கும் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்று பாமரனுக்கு தெரியுமென்பதால் ஒட்டு மொத்த படமும் ஒட்டாமல் போய் விட்டது

ஆனாலும் ஷங்கரின் மேக்கிங் மற்றும் ராம்சரன் ஆக்டிங்க்-கிற்காக ஒரு முறை பார்க்கலாம்

மார்க் 2.75/5

Tags :
Advertisement