குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து... 12 குழந்தைகள் உட்பட 32-க்கும் மேற்பட்டோர் பலி!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் டிஆர்பி என்ற பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில், நேற்று மாலை வழக்கம் போல் ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது. விளையாட்டு மையத்தில் சிக்கிக் கொண்ட குழந்தைகள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் அலறினர். கூச்சலிட்டுக் கொண்டிருந்தே அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து ராஜ்கோட் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தீ விபத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, தங்களது விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கர தீ விபத்து சம்பந்தமாக விளையாட்டு மைய உரிமையாளர் யுவராஜ் சிங், மேலாளர் நிதின் ஜெயின் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விளையாட்டு மையத்தை 30 முதல் 40 ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.