For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சபரிமலை பக்தர்களுக்கு உதவ வழிக்காட்டி பட்டை & வாட்ஸ் அப்!

06:51 PM Nov 20, 2024 IST | admin
சபரிமலை பக்தர்களுக்கு உதவ வழிக்காட்டி பட்டை   வாட்ஸ் அப்
Advertisement

பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டலபூஜை வழிபாட்டுக்காக கடந்த 15-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசலை குறைப்பதற்காக தினமும் 18மணிநேரம் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிகபட்சமாக தினமும் 80ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஞாபசக்தி பிரச்சினை, நினைவு தடுமாற்றம் உள்ள வயோதிக பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சபரிமலையில் வழிகாட்டி கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. வழிதவறியவர்களை இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் , சன்னிதானம் முதல் நிலக்கல் வரையில் 48 இடங்களில் பிஎஸ்என்எல் இலவச wifi hotspot வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அடுத்தகட்டமாக, மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணா ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில், ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில், வாட்ஸ் அப் செயலியில் AI எனும் செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்கள் எளிதில் கிடைக்கப்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், அந்த AI வாட்ஸ்அப் எண் மூலம் சன்னிதான தரிசன நேரம், தங்கும் வசதி, அருகில் உள்ள மற்ற சேவைகள், அவசர உதவி எண்கள், KSRTC பேருந்து சேவைகள், ஹோட்டல்கள் ஆகிய விவரங்கள் கிடைக்கப்பெறும். இந்த அவசர உதவி எண்ணாது, 6238008000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi என மெசேஜ் செய்து, தங்களுக்கான மொழியை தேர்வு செய்யவும். மலையாளம் , ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 6 மொழிகளில் இந்த செயலி செயல்படும் என சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement