தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை ; குடிசை வாழ் மக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு!

08:58 PM Dec 06, 2020 IST | admin
Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு மூன்று வேளை விலை யில்லா உணவு வழங்கும் திட்டத்தை இன்று அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர்.

Advertisement

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கரையை கடந்த போது ஏற்பட்ட மழை மற்றும் அதிவேகமான காற்றின் காரணமாகவும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேக்கம் மற்றும் ஒரு சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக குடிசைவாழ் பகுதிகளில் வாழும் சுமார் 5.3 லட்சம் குடும்பங்களை சார்ந்த 26 லட்சம் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

Advertisement

முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் 26 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு விலையில்லா, தரமான, சுகாதாரமான உணவினை இன்று முதல் 13–ந் தேதி வரை 3 வேளையும் வழங்க கனிவோடு உத்தரவிட்டார். அதன்படி சென்னை குடிசை வாழ் பகுதி மக்களுக்கு இன்று முதல் இலவச உணவு அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் வழங்கப்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் பெசன்ட் நகர், ராயபுரம் பகுதிகளுக்கு சென்று குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கினார். அண்ணாநகர் மண்டலத்தில் செனாய் நகரில் உள்ள அண்ணா சமூக நல கூடத்தில் 26 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் இன்று காலை துவக்கி வைத்தார்.

300 இடங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. 800 இடங்களில் இந்த உணவு வழங்கப்படுகிறது. நேரில் வந்து உணவு பெற முடியாதவர்களுக்கு வீட்டுக்கு சென்று உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். உடன் தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ. சென்றார்.

காலையில் இட்லி, கிச்சடி, சாம்பார், சட்னி, கேசரி ஆகியவையும், மதியம் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்ற கலவை சாதமும், தயிர்சாதமும் வழங்கப்படுகின்றன. மாலையில் டீ, காபி கொடுக்கப்படுகிறது. இரவில் சப்பாத்தி, குருமா, இட்லி, சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது.

13–ந் தேதி வரை சுகாதாரமான இலவச உணவு வழங்கப்படுவதால் குடிசைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
chennaiCORPORATIONfree foodslum dwellers
Advertisement
Next Article