For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாலிவுட் லெஜெண்ட் ஷியாம் பெனகல் காலமானார்!

05:24 AM Dec 24, 2024 IST | admin
பாலிவுட் லெஜெண்ட் ஷியாம் பெனகல் காலமானார்
Advertisement

சர்வதேச புகழ்பெற்ற பாலிவுட் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. இந்தியா திரையுலகில் மாற்று சினிமா பாணியைக் கைக்கொண்ட மூத்தோர்களில் ஒருவராக கருதப்படுகிறார் பெனகல். இந்திய சமூகத்தின் அப்பட்டமான சித்தரிப்புகளும் கடுமையான சமூக கருத்துகளும் இவரது திரைப்படங்களில் இடம்பெறுவது வழக்கம்.அந்த வகையில் அவரது இந்திய மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. கடந்த 14-ம் தேதியன்று ஷியாம் பெனகல் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்நிகழ்வில் அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். நஸ்ருதீன் ஷா, திவ்யா தத்தா, ஷபானா ஆஸ்மி, அதுல் திவாரி, குணால் கபூர் உள்ளிட்ட திரைப் பிரலங்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

1934-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் ஹைத்ராபாத் மாகாணத்தின் திருமலகிரி என்ற ஊரில் பிறந்தவர். இவரது மாமா குருதத் திரைப்பட இயக்குநராகவும் நடிகராகவும் இருந்ததால் பெனகலுக்குன் இளம் வயதிலேயே சினிமா ஆர்வம் உருவானது. கல்லூரி படிப்புக்குப் பிறகு பாம்பேவில் உள்ள நிறுவனத்தில் இணைந்து விளம்பரப்படங்களை எடுக்கத் தொடங்கினார். புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடூட்டின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள சில்ட்ரன்ஸ் டெலிவிஷன் பயிற்சிப் பட்டறையில் பணியாற்றியுள்ளார். நியுயார்க்கில் இருந்து இந்தியா திரும்பியவர் 1973-ம் ஆண்டு தனது முதல் திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

ஆங்கூர் (1973), நிஷந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977), மம்மோ (1994), சர்தாரி பேகம் (1996), ஜுபைதா (2001) ஆகியன இவரது முக்கிய படைப்புகளாக கருதப்படுகின்றன. பல குறும்படங்களையும், தொடர்களையும் தயாரித்துள்ளார். அன்றைய சுயாதீன திரைப்பட இயக்குநர்களின் கலையம்சம் பொருந்திய படங்கள் வெகுசன மக்களை ஈர்க்க தவறியபோது, இவரது படங்கள் சமூக கருத்துகளை வலுவாகக் கூறும் அதே வேளையில் வணிக ரீதியிலாகவும் வெற்றி பெற்றது பலரையும் யோசிக்க வைத்தது..புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இவரது 7 திரைப்படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன், எக்ஸலன்ஸ் இன் சினிமா அவார்ட் என்ற விருதினை வழங்கி சிறப்பித்தது.

Tags :
Advertisement