தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

செம்பிளம்பான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்!

05:38 PM Jan 10, 2025 IST | admin
Advertisement

காணுமிடமெங்கும் செம்பிளம்பாக காட்சி அளிக்கிறது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதி..!ஒருகோடியே அறுபது லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது அரசு தரப்பு. ஐந்து பேர் சாம்பலாகி இருக்கிறார்கள்.சிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதிகள் வசதியான மக்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளில் உள்ள வீடுகளை காட்டுத்தீ அழித்துள்ளது. இங்கு பெரும்பாலும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பிற பிரபலங்கள் வசித்து வந்தனர்.இதில் ஹாலிவுட் பிரபலங்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேமி லீ கர்டிஸ், மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் உள்ளிட்டவர்களின் வீடுகள் எரிந்துவிட்டது. மேலும், இவர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். மூர், கேரி எல்வெஸ் மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோர் காட்டுத் தீயில் வீடுகளை இழந்ததாகக் கூறினர். ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், அன்னா பாரிஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களும் தங்களது வீடுகளை இழந்துவிட்டனர்.

Advertisement

அந்த வகையில் அமெரிக்காவின் பெரும் பணக்காரப் பகுதியான லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் வீடுகள், கார்கள், தோட்டங்கள் காடுகள் மட்டுமன்றி தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துமே சுடுசாம்பலாகி இருக்கின்றன.மொத்த இழப்பு ஐம்பது முதல் ஐம்பத்தேழு பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் முதல் கட்ட அறிக்கையை விடுத்திருக்கின்றன.ஆனால் உண்மையான நஷ்டம் இதைக் காட்டிலும் பத்து பதினைந்து மடங்காக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

Advertisement

தற்போது தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் இன்றி அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முன் அனுபவம் ஏதுமின்றி உள்ள தீயணைப்பு துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் சன்செட் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் இந்த தீ விபத்துதான் மிகவும் மோசனமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரும் நாசம் முடிந்தபின் அமெரிக்காவின் மொத்த இழப்பு என்பது ஐநூறு பில்லியன் முதல் எண்ணூறு பில்லியன் டாலர் அளவில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சிலர் ஆயிரம் பில்லியன்.. அதாவது ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு இருக்கலாம் என்கிறார்கள். உண்மைகள் மெல்ல மெல்லத்தான் வெளிவரும். தற்போது வந்த தகவல்படி காட்டுத்தீ காரணமாக தங்களின் உடமைகளை விட்டு விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,37,000 பேர். இதனிடையே தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை வரை புகை மண்டலம் மற்றும் துசுகளில் வசிக்கவேண்டியது இருக்கும் எனக்கூறப்படுகிறது.

Tags :
americahollywoodLos Angelesred plum!wildfiresஅமெரிகககாட்டுத் தீ
Advertisement
Next Article