அமெரிக்காவில் புலம் பெயர்ந்த இந்தியர்களின் கதி திக்..திக்!
மீண்டும் அமெரிக்காவில் இருந்து இந்திய புலம் பெயர்ந்தனர் திரும்பி அனுப்ப தனி விமானம் பறந்து வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருப்பவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்ப படுகின்றனர். கடந்த தேர்தலில் இடம் மக்கள் அமெரிக்காவின் வளங்களை சுரண்டுவதாக டிரம்ப் பிரச்சாரம் செய்தார். இவர்கள் பொது எதிரிகள் என சித்தரிக்கப் பட்டனர். உலகம் முழுவதும் வலதுசாரி மனப் பாங்கு இவ்வாறு புலம் பெயர்ந்த மக்களை அழைப்பது வாடிக்கை.
ஆனால் அமெரிக்கா 1951 ஆண்டு ஐ.நா.சபையின் அகதிகளுக்கான மாநாடு வரைவை ஏற்றுக் கொண்ட நாடு. அதன் படி அமெரிக்காவில் 1980 ஆண்டு அகதிகளுக்கான சட்டம் உருவாக்கப் பட்டது. சர்வதேச அகதிகளுக்கான மாநாடு,1967 அகதிகளுக்கான திருத்தம் படி இனம், மதம், நிறம் மற்றும் சமூக, அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டில் வாழ முடியாதவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் அடையலாம்,அவர்கள் அகதிகள். அது போன்றவர்கள் குற்றவாளியாக கருதக்கூடாது. இது போன்றவர்களை வெளியேற்ற உரிய விசாரணை நடத்த வேண்டும்.இவைகள் அமெரிக்க சட்டம் அகதிகளுக்கு வழங்கியுள்ள சட்ட வரையறைகள்.
ஆனால் அந்த அமெரிக்கா சட்டம் டிரம்ப் அரசு தனது நிர்வாக உத்தரவுகள் மூலம் மீறுகிறது.மேலும் சட்டவிரோத குடியேறிகளை தேடுதல் என்ற பெயரில் பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்களில் தேடுதல் கூடாது.ஆனால் அவையும் தற்போது மீறப்படுகிறது.அகதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்ற போதும் அவர்கள் மனிதர்கள். மனிதர்கள் கண்ணியத்துடன் நடத்தப் படவேண்டும்.
அமெரிக்கா தன் சொந்த நாட்டின் சட்டத்தையே மீறி கைகால் பூட்டி நாடு கடத்தப்படும் அவலம் நிகழ்கிறது. போப் பிரான்சிஸ் அமெரிக்காவின் செயலை கண்டித்து உள்ளார். உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல் வரும் போது இந்திய அரசு அமெரிக்க அரசின் செயலுக்கு சிறு எதிர்ப்பு காட்டாமல் கடப்பது அவமானகரமான செயல்.