தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விஞ்ஞானிகளுக்கு படம் காட்டி பாடம் நடத்தும் பெண்வல்லுநர்!!

08:36 PM Oct 23, 2024 IST | admin
Advertisement

ரு சில இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றில்லை, அவற்றை அறிமுகம் செய்து கொள்வதே போதுமானது. அறிமுகம் செய்து கொள்ளும் போது அந்த தளங்கள் ஏதேனும் ஒரு செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில், பிரசண்ட் யுவர் சயின்ஸ் (https://www.presentyourscience.com/ ) இணையதளம், காட்சிவிளக்க கலையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Advertisement

இந்த தளத்தை மெலிசா மார்ஷல் எனும் வல்லுனர் நடத்தி வருகிறார். மெலிசா, பிரசண்டேஷன் என சொல்லப்படும் காட்சி விளக்க கலையில் வல்லுனராக அறியப்படுகிறார். காட்சி விளக்க கலையில் வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர் என்றாலும், மெலிசா விஞ்ஞானிகளுக்கான காட்சிவிளக்க கலையில் மட்டும் கவனம் செலுத்துவதில் மற்றவர்களில் இருந்து மாறுபடுகிறார்.

Advertisement

ஒரு பேரூரை நிகழ்த்தும் மாயத்தை, நல்லதொரு காட்சிவிளக்கம் நிகழத்தலாம். அதோடு தாக்கம் மிகுந்த திரைப்படத்தை பார்த்த அனுபவத்தையும் அளிக்கலாம். அதனால் தான் காட்சிவிளக்க கோட்பாடுகளும், உத்திகளும் தனியே வலியுறுத்தப்படுகின்றன.

நெத்தியடி காட்சிவிளக்கத்தை தயார் செய்ய முடிந்தால், பார்வையாளர்களை கவர்ந்துவிடலாம் என்கின்றனர். இதன் முக்கியத்துவத்தை விஞ்ஞான ஆய்வில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து, தங்கள் ஆய்வு கருத்துகளை சிறந்த முறையில் காட்சிவிளக்கம் வாயிலாக வழங்க மெலிசா வழிகாட்டுகிறார். இந்த சேவையை தொழில்முறையில் வழங்கி வருகிறார்.

காட்சிவிளக்க வழிகாட்டுதலை விஞ்ஞானிகளை மையமாக கொண்டு தொழில்முறையாக வழங்கலாம் எனும் தகவலை இந்த தளம் சொல்கிறது. இதில் மெலிசா எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார் என்பதையும் அவரது தளம் உணர்த்துகிறது.

மெலிசா காட்சிவிளக்க கலை தொடர்பாக வழங்கிய டெட் உரைக்கான இணைப்பும் இருக்கிறது.

சைபர்சிம்மன்

Tags :
A female expertconducts a lessonpresent your scienceshow pictures scientists
Advertisement
Next Article