2024-ல் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு!.
ஆண்டுதோறும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.
வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (World Weather Attribution (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ( Climate Central ) மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உலகளவில் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சிறு தீவுகள், வளரும் நாடுகள் இந்த கூடுதல் வெப்ப நாட்களால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், அப்பகுதிகளில் கூடுதலாக 130 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடும் வெயில், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக உலகநாட்டு மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். குறிப்பாக
சூடான், நைஜீரியா, கேமரூன் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.